ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ திரைப்படம் வெற்றி கண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி நிகழ்வில் நடிகர் சசிகுமார் பேசியதாவது: “என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கதாபாத்திரமும் முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.********
முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

