புதிய முயற்சியில் களம் இறங்குகிறார் தயாரிப்பாளர் திரு.ஆர்.ராகேஷ்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்  நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள ஆர்.ராகேஷ், கபாலி, காலா, பைசன் போன்ற வெற்றி திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவின் உள்ளார்ந்த படைப்புத் தன்மையையும், தரமான உள்ளடக்கத்தின் அவசியத்தையும் நன்கு புரிந்துள்ள ஆர். ராகேஷ். தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கியுள்ளார், அவரது தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கிறார்.*******

குட் நைட் , குடும்பஸ்தான்,போன்ற வெற்றி படங்களின் வரிசையில் இணையும் வகையில், இந்த திரைப்படமும் உணர்வுகள், வலுவான கதைக்களம், நவீன திரைக்கதை மற்றும் மாபெரும் திரை அனுபவத்துடன் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக தொடங்க உள்ள நிலையில், இயக்குனர், நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது, தமிழ் சினிமாவில் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தலைமுறை திரைப்படங்களில், இந்த படம் மேலும் ஒரு முக்கியமான மற்றும் பேசப்படும் படைப்பாக மாறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகிலும் ரசிகர்களிடையும் அதிகரித்துள்ளது. பிஆர்ஓ : ஷேக் PRO : Shiek