நடிகை குஷ்பு தயாரிக்கும் புதிய படம் *டபுள் ஆக்குபன்சி”

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். குஷ்பு அவர்கள் பேசும்போது, “என்னுடைய மகள் இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார்.என்றார்******

பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார். ஆனால் அவரது பெயரை போட மறந்து விட்டார்கள். இந்த படத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது. அவர்களுக்கு ஒரு புரொடியூசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனந்திதாவிற்கு அவரது அப்பா போல வேலை செய்ய வேண்டும். ஒரு வேலையை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தேடுவார்கள். இந்த மேடையில் அவரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கு. இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.

*தொழில்நுட்பக் குழு::  இயக்கம்: அஸ்வின் கந்தசாமி  தயாரிப்பாளர்கள்: ஏ.சி.எஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பூ சுந்தர் (அவ்னி மூவீஸ்) CEO: ஆர். மதன் குமார் கிரியேட்டிவ் புரொடியூசர்: ஆனந்திதா சுந்தர் இசை: சாம் சி.எஸ் ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்ரவர்த்தி படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி கலை இயக்கம்: செந்தில் ராகவன் ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி ஆர். கண்ணன் தயாரிப்பு நிர்வாகத் தலைவர்: என். மணிவண்ணன் தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி VFX: ஸ்டுடியோ ஹெட் – ஃபாசில் முகமது எஸ் (பிக்சல் லைட் ஸ்டுடியோ) கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் (நாக் ஸ்டுடியோஸ்) ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி – எஸ். அழகியகூத்தன் ஒலி கலவை: சுரேன் ஜி (ஹம் ஆடியோ) புகைப்படம்: வி. ராஜன் மேக்கப்: என். செல்லதுரை விளம்பர வடிவமைப்பு: வியாகி மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்  பாரஸ் ரியாஸ் கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: கச்சா மேங்கோ டிஜிட்டல் மார்க்கெட்டிங்: பீட்ரூட் ஆடியோ லேபிள்: சரீகமா இந்தியா லிமிடெட் (RPSG குழுமம்)