“மனிதன் தெய்வமாகலாம்” முன்னோட்டம் வெளியீடு

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முன்னோடக் காட்சி வெளியிடப்பட்டது. இதை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, RS சதிஷ், கௌசல்யா, Mime கோபி, Y. G. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிகண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*******

70 விநாடிகள் நீளமான இந்த முன்னோட்ட காட்சி, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்தின் திறமையான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துகிறது. சிறுமி, ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான குரல் உரையாடலுடன், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வலுவான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.. ஒரு ஈர்க்கும் திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டீசர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து உடனடியாக நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதன் தெய்வமாகலாம் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜயா சதிஷ் மற்றும் RS சதிஷ் ஆகியோர், Vyom Entertainments நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த டீசரின் தாக்கத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் AK பிரியன் அவர்களின் இசையமைப்பு பெரும் பங்காற்றுகிறது. எடிட்டர் தீபக் S அவர்களின் துல்லியமான எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வரமா K அவர்களின் வசீகரமான காட்சிப்பதிவு டீசரின் தரத்தை மேலும் உயர்த்துகின்றன.

பின்னணிப் பணிகள் ( Post Production) வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.