இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது.. பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.*******
15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதத்தின் புதிய பதிப்பிற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, ராஜஸ்ரீ சோல் (Rajshri Soul) யுடியூப் சேனலுக்காக சீ ரெக்கார்ட்ஸ் (Sea Records) நிறுவனத்தின் சந்தீப் ரெட்டி தயாரித்துள்ளார். மே 23, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த பாடல், மூலப் பாடலின் பக்தி ஆழத்தைப் போற்றுவதோடு, நவீன ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற சமகால இசை வடிவத்தில் அதை வழங்கவும் முயல்கிறது.

