சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் பதாகை வெளியீடு

பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா – புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் தலைப்பு  மற்றும் பதாகையை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌ ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி – ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார்.*****

தொழில்நுட்பக் குழு : கலை இயக்குநர் : மன்ட்ரூ ரவிக்குமார் ஆடை வடிவமைப்பாளர் : பிரியங்கா ரெபாக்கா ஸ்ரீநிவாஸ் தயாரிப்பு வடிவமைப்பாளர்:  உல்லாஸ் ஹைதுர் படத்தொகுப்பு : ஆதித்யா திவாரி ஒளிப்பதிவு : ஹர்ஷா மல்லிகார்ஜுன் – தேவ் தீப் காந்திகுண்டு இசை : சிஞ்சித் யெர்மில்லி கிரியேட்டிவ் புரொடியூசர் : வினய் ரெட்டி மமிடி. நிர்வாகத் தயாரிப்பு : உஜ்வல் பி. எம். தயாரிப்பாளர்கள் : சிவசரண் ரெட்டி – ஜக்கிடி – சசிதர் ரெட்டி படமடி இயக்கம் : அஜய்  நாக் வி மக்கள் தொடர்பு : யுவராஜ்.