ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ், செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்த்கின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மிர்சி.சிவா, “ராம் சாருடன் படம் என்றால் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது. ’நானே இதுவரை செய்யாத படம் இது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’ என்று திரைகதையை கொடுத்தார். உடனே ஒத்துக் கொண்டேன். படப்பிட்ப்பில் இயக்குநராக மட்டுமில்லாமல் எல்லா வேலைகளும் அவர் எடுத்துப் போட்டு செய்தார். அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்” என்றார்*******
இயக்குநர் ராம் பேசியபோது கூறியதாவது: “எல்லோரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார். ஜியோ ஹாட்ஸ்டார் எனக்கு வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம். பிரதீப்பை பார்த்தாலே தனி எனர்ஜி வரும். சிவா,கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர் இந்த செட்டில் தான் நாம் ரிலாக்ஸாக இருந்தேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை முதலில் பார்த்து வாழ்த்து சொன்னார். அவர் படம் பார்த்து வாழ்த்தியதுடன் உலக அளவில் வெளியிடுவது எங்களின் பெரும் பலம். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் இந்த கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்துவிட்டது. இந்த படத்தை தயாரிக்க நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பா- மகன் எமோஷன் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.