ட்ரம் புரொடக்ஷன் ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் உமா மகேஸ்வரி தயாரிப்பில், பிரசாந்த் ராமன் இயக்கத்தில், லிங்கா, சாரா ஆச்சர் நடிப்பில், அடிதடி வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம் “தாவுத்”. இம்மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் பிரசாந்த் ராமன் பேசியதாவது: “சின்ன படங்கள் ஜெயித்தால் தான் இன்ட்ஸ்ட்ரி நல்லா இருக்குமெனச் சொல்வார்கள், அதை மனதில் வைத்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார் இந்தப்படத்திற்குக் கடைசி நிமிடத்தில் உதவி செய்தார். அதே போல் இந்தப்படத்திற்கு உதவி செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. பீட்சா டெலிவரி பாயாக இருந்து இயக்குநர் ஆகியுள்ளேன். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் தம்பி துரை சார். அவர் வெத்தலையில் இருந்து பித்தலை எடுப்பவர். நல்ல பெயர் அவர் எடுத்துக்கொள்வார் ஏதாவது பிரச்சனை என்றால் என்னை மாட்டிவிடுவார்.******
ரதாரவி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன், உடனே பேசி வரச்சொல்கிறார் என அவரிடம் அனுப்பிவிட்டார். நான் பயந்து கொண்டே போனேன் ஆனால் அவர் என்னை அவ்வளவு மரியாதையாக நடத்தினார். சார் சம்பளம் என கேட்டேன், நான் வந்தால் நீ நல்லா இருப்பேல்ல.. போ பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவர் மாதிரி ஆட்கள் இருப்பதால் தான், சின்ன பட்ஜெட் படங்கள் உயிர் வாழ்கிறது. தயாரிப்பாளர் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பார் ஆனால் சாப்பாட்டில் என்றுமே கணக்கு பார்த்ததில்லை. எல்லாமே என்னை நம்பி தந்துவிட்டார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். லிங்கா முதல் நாள் ஷீட்டில் 7 விதமாக நடித்துக் காட்டினார். எனக்கு என்ன தேவை என்பதைக் காட்டத்தான் அவ்வாறு நடித்தார். இந்த கதாப்பாத்திரத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளார். சாரா சிறப்பாக நடித்துள்ளார். சரத் ரவியை வில்லனாக யாரும் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் படம் பார்க்கும் போது அனைவரும் பாராட்டுவார்கள். நாயகி சாரா உலக சினிமா பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். இசையமைப்பாளர் ராக்கேஷ் என் நண்பன், என் அடுத்த படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளராக இருப்பார். மிக அட்டகாசமாக இசையமைத்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இம்மாதம் 12ஆம் தேதி 12 படம் வருகிறது அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் தயாரிப்பு – S. உமா மகேஸ்வரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.

