சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படம்’மிஸ்டர் பாரத்’

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். இந்தப் படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*********

இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்து கொண்டதாவது, “இதற்கு முன்பு ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை. நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளேன். எந்தளவுக்கு அப்பாவியான இளைஞன் என்றால், ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். எங்களுக்கிடையேயான உறவில் அவரது பழைய கால நகைச்சுவை பாணியையும் ரசிகர்கள் மீண்டும் ரசிக்க முடியும். அதுவே படத்தின் பலமாக இருக்கும்” என்றார்.

கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், குடும்பத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களும் அவரது வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய பார்வையை மாற்றியுள்ளன. அத்தகைய சூழலில், பாரத்தின் தூய்மையான மனமும் அப்பாவித்தனமும் அவரை ஈர்க்க, அதன் பிறகு நடக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களே இந்தப் படத்தின் கதை.

இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை, காதல், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுக்கு பதிலாக, மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான திரைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரம்: ஒளிப்பதிவு: ஓம் நாராயண்,  இசை: பிரணவ் முனிராஜ், படத்தொகுப்பு: திவாகர் டெனிஸ்,  கலை இயக்கம்: பாவனா கோவர்தன்,  ஆடை வடிவமைப்பு: நவா ரேம்போ ராஜ்குமார், ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி. மற்றும் அழகியகூத்தன், நடனம்: அசார்,  ஒப்பனை: சையது மாலிக் எஸ்.,சண்டைப்பயிற்சி: கனல் வி கண்ணன் & கனல் எஸ் குகன், இணை நிர்வாக தயாரிப்பாளர்: ஆதவன் சுப்ரமணியன், தயாரிப்பு நிர்வாகி: டி.செல்வராஜ், பார்த்திபன் செல்வம், மஞ்சுநாதன், கலரிஸ்ட்: கெளஷிக் கே.எஸ்., பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன்,  கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்., நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உமா மகேஸ்வரன்.