மண்டாடி படத்தின் “உசுரே நீதான் புள்ள” பாடல் வெளியானது

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை..இப்படத்தில் சூரி, சுஹாஸ்,  மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார், பாலா சரவணன், மிதுன், கீர்த்திகா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க,  தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான “ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் “உசுரே நீதான் புள்ள” எனும் இனிமையான காதல் பாடல் வெளியாகியுள்ளது.++++++++++

சூரி மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல், காதல் மற்றும் இருவருக்கிடையேயான அழகான இணைப்பை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது. இதமான மனதை தொடும் வரிகள் மற்றும் கதாநாயகன்–கதாநாயகியின் அழகான கெமிஸ்ட்ரியுடன் உருவாகியுள்ள “உசுரே நீதான் புள்ள”, கேட்பவர்களின் மனதில் காதலின் அழகை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது..சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள – என மயக்கும் பாடல் வரிகளில் – உசுரே நீதான் புள்ள – ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகள் எழுத, கபில் கபிலன்,சஞ்சனா அவர்கள் பாடியுள்ளனர்.. மண்டாடி செப்டம்பர் 10,2026 திரையரங்கில் வெளியாகிறது.