சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. இருபது ஆண்டுகால திரைத்துறை வாழ்வில் அவர் இயக்கிய படம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு மற்றும் பறந்து போ. தற்போது 6வது படமாக ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை இயக்கியுள்ளார் பழங்காலத்தில் பாட்டியிடம் பேரன் அல்லது அம்மாவிடம் மகன் கதை சொல்லச் சொல்லி கேட்பான். அப்போது அம்மா சொல்லுவாள். ஒருகாலத்தில் ஏழு கடல் ஏழு மலையை தாண்டி ஒரு காட்டு மரப்பொந்தில் ஒரு கிளி இருக்கும். மந்திவரவாதியின் உயிர் அந்த கிளியில் இருக்கும். அந்த கிளியை கொன்றால்தான் மந்திரவாதி சாவான். அதனால் ஒரு வீரன் அந்த கிளியை பிடிக்க ஏழு கடலுக்கு அப்பால் தோனியில் போவான். என்று கதை சொல்ல ஆரம்பிப்பாள். அப்படித்தான் இந்த கதையை சொல்கிறார் ராம். கதையின் கருப்பொருள் அனைத்து உயிர்களும் சமம். இதை மையக்கருவாக வைத்து படத்தை ஆரம்பிக்கிறார் ராம். கதைப்படி எட்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வகுகிறார் நிவின் பாலி. அவரது காதலியான அஞ்சலி ஒவ்வொரு காலகட்டத்திலும் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருகிறார். இவ்வாறு கதை சொல்லிக்கொண்டு வரும் ராம், 1985 ஆம் ஆண்டுக்கு வருகிறார். தீபாவளி சிறப்பு ரயிலில் நிவின்பாலி தூங்கி கொண்டு இருக்கிறார். அதே ரயிலில் துபாயில் கடந்த 8 வருடங்களாக வேலை பார்த்துவிட்டு தீபாவளிக்காக ஊருக்கு வரும் சூரி அதே ரயிலில் ஏறுகிறார். துங்கக் கொண்டிருந்த நிவின் பாலியை தட்டி எழுப்புகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நிவின், சூரியை அடித்து துவசம் செய்கிறார். அடிதாங்க மாட்டாமல் பயந்து நடுங்குகிறார் சூரி. இதற்கிடையே அதே ரயிலில் ஒரு எலியும் வாழ்ந்து வருகிறது. அந்த எலிக்கு நவீன் பிஸ்கட் எல்லாம் கொடுத்து அன்போடு தடவி கொடுத்து அதன்மீது பாசத்தை பொழிகிறார். மனிதர்களைத் தவிர மற்ற உயிரனங்கள் மீது ஏன் அன்பு செலுத்துகிறார்?. நிவின் பாலி தனது காதலியை கண்டுபிடித்தாரா? இல்லையா?என்பதுதான் கதை. இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் தனது திரைப்பயணத்தை தொடங்கியிருக்கும் ராம், தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார். உயிரனங்கள் அனைத்தும் இறைவனால் படைக்கபப்ட்டவை என்றும் அதுவது வாழ்வதற்குறிய உரிமையையில் எவறும் தலையீடுகள் கூடாது என்பதுதான் ராம் இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். நவின் பாலியின் நடிப்பு கனகச்சிதமாக கதாபாத்திரத்துக்கு பொறுந்தி இருக்கிறது. பயந்து நடுங்கி கெஞ்சுவதில் சூரியின் நடிப்பு அபாரம். வேலை பார்க்கும் போது வெளிநாட்டு ஏமாற்று பேர்வழிகளிடம் அடி வாங்கவதையும், ஊருக்கு திரும்பிவர கடவுச்சீட்டை அவர்களிடம் கெஞ்சிக் கேட்பதையும் குடும்பத்தைவிட்டு வெளிநாட்டுக்குச் செல்லும் தமிழக இளைஞர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் எச்சரிக்கை செய்கிறார் சூரி, காதலியாக வரும் அஞ்சலியும் தனக்கே உரிய தனித்துவ நடிப்பை கொடுத்து அசத்துகிறார். இவர்களுடன் ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. ஆச்சரியம் தருகிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்துடன் நம்மை பயணிக்க வைக்கிறது. அழுத்தமான கதைக்களம் படத்தின் பலம். காட்சிகளில் இன்னும்
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்பதை அழகாக கூறி, மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை எடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ராம். யாதும் உயிரே யாவரும் போற்றுவீர்.
ஏழு கடல் ஏழு மலை திரைப்பட விமர்சனம்
