“அன்பில் அவன்” திரைப்பட விமர்சனம்

கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா  செல்வம் ஆகியோரின் தயாரிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத், ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அன்பில் அவன்”. ப்ரீத்தி முகுந்தன் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவள். நடுத்த்ர வசதியுள்ள அசோக் செல்வனை காதலிக்கிறாள். பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை திருமணமும் செய்து கொள்கிறாள். இருவரும் சென்னையில் 7 நட்சத்திர விடுதிகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்களின் மேலாளர்களால் அவ்வப்போது அவமானப்படுத்தப் படுகிறார்கள். இருவரும் தங்களது கவலையை மறக்க மலைபிரதேசத்துக்கு செல்கிறார்கள். அஙுகு சென்றதும் பிரீத்தி முகுந்தன. தனது நீண்டநாள் ஆசையை அசோக் செல்வனிடம் சொல்கிறாள். அது என்ன ஆசை? தன் மனைவியின் நீண்டநாள் கனபு ஆசையை அசோக் செல்வன் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதுதான் கதை.

கணவன் மனைவிக்குள்ள பாசபிணைப்பை மையக்கருவாக வைத்துக் கொண்டு திரைக்கதையை ஒரு காவிய படைப்பாக தந்துள்ளார் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன். தனது உயிரே மனைவிதான். மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதைத்தவிர உலகில் சிறந்தது வேறொன்றும் இல்லை என்ற உணர்வை, அசோக் செல்வன் தனது நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கிறார் என்று சொல்வதைவிட உறைய வைக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
தனது உலகமே மனைவிதான் என்ற உணர்வை அசோக் செல்வன் தனது கதாபாத்திரம் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக 70 அடி உயரத்திலிருந்து அசோக் செல்வன் நிஜமாகவே குதிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. காதலுக்காக பெற்றோரை விட்டு வந்து, தான் கனவு கண்ட வாழ்க்கைக்காக கணவனுடன் இணைந்து போராடும் பெண்ணாக ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் கதிர் பாலு, ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக சாபுமோன் அப்துல் சமது, ராணியாக ரேவதி உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். கோவிந்த் வசந்தாவின் இசையும்
கௌதமின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்கபலமாக உள்ளது- உச்சக்கட்ட காட்சியையின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் பார்வையாளர்கள் பொறுமையை இழந்திருக்க மாட்டார்கள். கணவன் மனைவியின் பாசத்தின் எல்லையை படத்தில் காட்டியிருக்கும் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பாராட்டுதலுக்குறியவர்.