சென்னை.அக்.7- ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில், ஷஷாங்க் யேலேட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில், சாரா பாலேகர், மகேஷ் மஞ்ரேகர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜூ, திவ்யா பிள்ளை, எஸ்.எஸ்.ஷஷாங்க் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டோன் ட்ரபுள் தி ட்ரபுள்”. ஃபஹத் பாசில் மருத்துவு ஊர்தி ஓட்டுநராக வேலை பார்க்கிறார். அவருக்கு 25 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் ஃபஹத் பாசிலுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். கடனை அடைக்க ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளையை
கடத்தி அப்பிள்ளையின் பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க எண்ணுகிறார். அர்தன்படி சாரா என்ற சிறுமியை கடத்தி ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். உண்மையில் அந்த சிறுமி இவரிடம் மாட்டவில்லை. ஃபஹத் பாசில்தான் அந்த சிறுமியிடம் மாட்டிக் கொள்கிறார். அப்படியென்றால் அந்த சிறுமி யார்? அந்த சிறுமியிடமிருந்து ஃபஹத் பாசில் தப்பித்தாரா? இல்லையா?. என்பதுதான் கதை.
ஃபஹத் பாசலின் எதார்த்தமான நடிப்பும் துருதுருப்பான வேகமும் ரசிலர்களை கவர்கிறது. கதாபாத்திரத்தின் கதைக் கருவின் நுணுக்கத்தை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். உச்சக்கட்ட காட்சியில் சிறுமி யார் என்று தெரிந்ததும் கண்கலங்கி காலனின் கையில் சிக்கி சிறுமியுடன் காற்றில் கரைந்துபோகும் காட்சி ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. சிறிதும் குறைவின்றி சிறப்பாக நடித்துள்ளார் சிறுமி சாரா. எதிரிகளிடமிருந்து ஃபஹத் பாசிலை காப்பாற்றிம் காட்சீயில் ரசிகர்களின் கைத்தட்டுகளை பெறுகிறார்.
கதையின் துணைபாத்திரங்களில் நடித்த அனைவரின் நடிப்பிலும் குறையொப்றும் சொல்வதற்க்கில்லை.. ஒளிப்பதிவுக்கேற்ற்அ பின்னணி இசையில் திரைக்கதை சலிப்பு தட்டாமல் செல்கிறது. படத்தில் சமுதாய விழிப்புணர்வு எதுவும் இல்லாமல் இருந்தாலும் பொழுதுபோக்கு படமாக குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக
இயக்குனர் சஷாங்க் எலேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

