“ஆல்பாஸ்” திரைப்பட விமர்சனம்

மோகனா. ஆர் தயாரிப்பில். மைதின் இயக்கத்தில்
துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி, ஜெயப்பிரகாஷ்,
செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா,
வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில், சரத் லோகித்ஷவா, ரோஷன் பஷீர், அருவி மதன், இயக்குநர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “ஆல்பாஸ்’. துஷ்யந்த் ஜெயபிரஷ், ஜெயபிரகாஷ், சுப்பிரமணி சிவா ஆகிய மூவரும் உற்ற நண்பர்களாக வடசென்னை குடியிருப்பு பகுதியில் தங்களது குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சரத் லோகித்ஷவா அப்பகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தேர்தல் செலவுக்கு தனது 5 கோடி ரூபாயை தனது பழைய குடோனில் வைத்திருக்கிறார். அந்த பணத்தை பட்டுவாடா செய்யவிருக்கும் நிலையில் துஷ்யந்த் ஜெயபிரஷ், ஜெயபிரகாஷ், சுப்பிரமணி சிவா ஆகிய மூவரின் மகன்களிடம் அந்த பணம் சிக்குகிறது.
அந்த 5கோடி ரூபாயை அவர்கள் ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் கொண்டு வருகிறார்கள். அந்த பணத்தை ஜெயப்பிரகாஷை தவிர மற்ற இரண்டு பேர்களும் அம்மூவரின் மனைவிகள் செந்திகுமாரி, வினோதினி, மோகனா, மகள் ஜனனி. பணத்தை க்ண்டுவந்த மூன்றுபேரின் மகன்களும் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். பணம் தன் வீட்டில் இருப்பதை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று மனைவி செந்தி குமாரியிடம் சத்தியம் செய்துவிடுகிறார் ஜெயபிரகாஷ். இந்நிலையில் தனது பணம் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள்தான் இருக்கிறது என்பது எம்.எல்.ஏ. சரத் லோகித்ஷவாவுக்கு தெரியவருகிறது. அது யார் வீட்டில். இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தனது ஆட்களைவிட்டு சந்தேகப்படாத வகையில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று பணத்தை தேடுகிறார்கள். அந்த பணம் கிடைத்ததா? இல்லையா? யார் வீடு என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை. இப்படத்தின் முக்கிய நோக்கமே வடசென்னைவாசிகள. ஒருவருக்கொருவர் பகைவளர்களாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டு வந்தார்கள். அந்த கண்ணோட்டத்தை மாற்றி, நண்பர்கள் அனைவரும் உறவினர்களாக வாழ்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் விதமாக படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன். ஜெயப்பிரகாஷ் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக நடித்து ரசிகர்களின் மனதில் நிறைந்துவிட்டார். கவுன்சிலர் சத்யா தன் மனைவி கார் ஓட்டுநரின் வீட்டில் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை நேரில் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழேவிழும் காட்சிதான் அந்தப் படத்தின் உச்சகட்ட நகைச்சுவையாகும் சிரிப்பலையில் திரையரங்கம் அதிர்கிறது. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக வாழ்ந்தாலும் மனைவியுடன் அந்தரங்க வாழ்க்கையில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதை ஒரு நகைச்சுவயாக இயக்குநர் இப்படத்தில் பதிவு செய்துள்ளார். படத்தில் நடித்த அத்துணை நடிகர்களும் தங்களது கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். அழுத்தமில்லாத ஒரு இலகுவான கதையை திரையில் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மைதின்.