ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார்

பெண்கள் தங்கள் கல்விக்கு அதிலும் உயர்கல்விக்குமுக்கியத்துவம் தர வேண்டும்.  பெண்கள் படிக்கவே கூடாதுஎன்ற காலம் போய் பள்ளி இறுதித் தேர்வுகளில்மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறும்காலமாக இன்றைய காலகட்டம் உள்ளது. பாரதி கண்டபுதுமைப் பெண்களாக மாணவிகள் மாறவேண்டும். அதற்குகடுமையாக உழைப்பதோடு  உரிமைக்கு அஞ்சாமல் குரல்எழுப்பும் துணிவும் வேண்டும். பொதுவாக ஆண்களைவிடபெண்களுக்குத்தான் மனோதிடம் அதிகம். பெண்களின்உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.  ஒப்பீட்டு அளவில்புதுச்சேரியில் பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும்திருப்திகரமாக உள்ளன.  பெண்களின் உரிமைகள் குறித்துஆன்களுக்கு கற்பிக்க வேண்டும்.  மாணவிகள் தங்கள் வீடுகளில்உள்ள தந்தை, சகோதரர்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.  இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டில்நாம் பெண்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்வதோடுசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வீராங்கனைகள்குறித்து தெரிந்துகொண்டு அவர்களின் தியாகத்தையும் போற்றவேண்டும் என்று புதுச்சேரி அரசின் செய்தி–விளம்பரத்துறையின் அரசு செயலரும் ஆசாதி கா அம்ருத்மகோத்சவ் மாநிலக் குழு உறுப்பினர்–செயலருமானதிரு.செ,உதயகுமார் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பவியல்பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்துநடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு பெருவிழாவின்ஒரு பகுதியாக நடத்தப்பட்ட  ஆன்லைன் பேச்சுப் போட்டியில்வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்வழங்கியபோது செயலர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சி செயலரின் அறையிலேயே நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது அறிமுக உரையில்28.8.2021 அன்று நடத்தப்பட்ட வெபினாரில் சாகித்தியஅகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும்புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் மின்னணுமற்றும் கணிப்பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர்க.நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருக்க விடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றுபரிசுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.முதல் பரிசை ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசைசி.தாமரைச்செல்வி மற்றும் இரண்டு மூன்றாம் பரிசுகளை எஸ்.ஸ்ரீமதி மற்றும் எஸ்.சந்தியா ஆகியோர் செயலாளர்திரு.செ.உதயகுமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப்பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன்மற்றும் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார் Read More

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி மறைவிற்கு,  ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா, வைகோ, ஆகியோர் ஆறுதல் கூறினார்கள்.  இன்று (01.09.2021) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல் Read More

டீ கடையில் மணமகள் தேவை பதாகை

கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மனம் திறந்த உன்னி கிருஷ்ணன், …

டீ கடையில் மணமகள் தேவை பதாகை Read More

‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன் இல்லத் திருமண விழா; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து!

திருச்சி, செப்டம்பர். 1: ‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன் மற்றும் ‘பெங்களூரு’ தாவூத் ஜாஹிர் ஆகியோரது இல்லத் திருமண விழா, ஆகஸ்ட். 22ந் தேதி திருச்சி ஃபெமினா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி …

‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன் இல்லத் திருமண விழா; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து! Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நேற்று (31.08.2021 – செவ்வாய்க்கிழமை)கட்சியின் தலைமை அலுவலகத்தில் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் புரட்சிதிலகம் திரு.ரா.சரத்குமார் அவர்கள் தலைமையில்இயக்கத்தின் கொடியேற்றி, நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி, நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு, இயக்கத்தின்காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக S.குருமூர்த்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளராக கார்த்திக்கும் நியமனக்கடிதம் வழங்கப்பட்டது. பொருளாளர் .A.N.சுந்தரேசன் முன்னிலையில், சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் D.மகாலிங்கம்  ஏற்பாட்டில், விழுப்புரம் மண்டல அமைப்புச் செயலாளர் செந்தில்முருகன், அரசியல் ஆலோசகர் A.D.சந்திரபோஸ் ஆகிய மாநில நிர்வாகிகளும், வட சென்னைமேற்கு R.எட்ராஜா, தென் சென்னை மத்தியம் கிண்டிதிரு.இரா.வேணு, மத்திய சென்னை மத்தியம் புரசைதிரு.D.நாகப்பன், திருவள்ளூர் வடக்கு மணலிதிரு.M.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மேற்குதிரு.M.A.ஆண்டனி, வட சென்னை கிழக்கு ராயபுரம்திரு.K.விஜயன், செங்கல்பட்டு தெற்கு திரு.A.பொன்வேல், செங்கல்பட்டு கிழக்கு தையூர் ரமேஷ், விழுப்புரம் கிழக்குதிரு.கோ.தசரதன், விழுப்புரம் வடக்கு திரு.G.ஆறுமுகம் கடலூர்தெற்கு திரு.சூர்யபிரசாத், திருவள்ளூர் மேற்கு திரு.சந்தனக்குமார், திருவள்ளூர் கிழக்கு திரு.G.K.பெருமாள் ஆகிய மாவட்டச்செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா Read More

போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது …

போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் Read More

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை

இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான சவ்வியமூர்த்தியின்  பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஆர்.எம்.வீயை சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி,ஆருக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார். ஆர்.,எம்.வீ இலங்கையில் தமிழ்வழி …

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை Read More

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள்

சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழகவீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களைஅனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியைபொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் எனமத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் உள்ள பொதிகைதொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வுமேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சிநிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சிதுணை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு. சையது ரபீக் பாஷாஉள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர்,  சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடிவருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள்இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள்இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திர போரில் அதிகம்அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம்ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களதுசெய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாகபல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள்தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள்மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்தசெய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி/ கோதுமை திட்டத்தின்பயன்கள், பிரதமரின் ஜன் தன் யோஜானா, மக்கள்மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம்மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள்விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும்என்றும் ஓரளவுக்காவது சுயமாக  வருவாயை ஈட்டும்வகையில், பொதிகை தொலைக்காட்சி தங்களதுதரத்தினை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  தொடர்ந்து, தொலைக்காட்சியின் பல்வேறுசெயல்பாடுகள் குறித்து இணையமைச்சரிடம்விளக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த காணொலியும்ஒளிபரப்பப்பட்டது.  அடுத்து அகில இந்திய வானொலி & சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்தியவானொலியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள் Read More

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரையென ஆய்வில் தகவல்

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு, “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். காலநிலை பேரழிவால் …

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரையென ஆய்வில் தகவல் Read More

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு!

திருச்சி, ஆகஸ்ட் 31: தமிழநாடு வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் தொழிலதிபர் எம். சிராஜுதீன் இல்லத் திருமண வரவேற்பு விழா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் 29ம் …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு! Read More