தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி – அரசுக்கு அறிவுறுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் டி. ஜெ. நவநீதன்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு  செய்தி துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்களின் கவனத்திற்கு: கொரோனாவைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரைப்பட தொழில், …

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி – அரசுக்கு அறிவுறுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் டி. ஜெ. நவநீதன் Read More

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன்

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் …

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் Read More

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி

தொரட்டி  பட நாயகன் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார் …

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி Read More

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது

பாதிக்கப்பட்ட சுசில்அரி இன்டர்நெஷ்னல் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் மீது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவருடைய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மூன்று …

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இந்திய நாடுமுழுவதும் பரவிக்கிடக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியனவற்றைதனியாருக்கு விற்க, தனியார்மயமாக்க எடுத்து வரும்நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது.  வருத்தத்திற்குரியது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1937-ல்தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போதுதமிழ்நாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டகிளைகளோடு குக்கிராமங்கள் வரை பரவலாகசெயல்படக் கூடிய வங்கியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  அதே போல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ​வங்கிகள் இணைப்பு என தொடங்கி சிலவங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்து, தற்போதுபெரிய வங்கிகளை தனியார் மயமாக்குவதால்வங்கிகளின் வரவு செலவு மற்றும் நாட்டின்பொருளாதாரத்தை ஒரு சில தனிப் பெரும்முதலாளிகளிடம் ஒப்படைத்து மக்கள் தனியாரிடம்கையேந்தும் நிலைக்கு தள்ளப்படப் போகிறார்கள்,  ​காங்கிரஸ் அரசு அன்னை இந்திராகாந்திஅம்மையார் தலைமையில்  தனியார் வங்கிகளைதேசிய உடமையாக்கியது.  ஆனால் இன்றோ மத்தியபா.ஜ.க அரசு முற்றிலும் எதிர்மறையாகதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியார்மயமாக்கி இந்த தேசத்தை 40 ஆண்டுகளுக்குபின்னோக்கி இழுத்துச் செல்ல முனைகிறது.  இந்நிலையில் வங்கிகளில் பணியாற்றும்பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், லட்சக்கணக்கான அவர்களின் குடும்பத்தினர்மட்டுமின்றி பல கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே வங்கிகள் தனியார்களுக்கு விற்க இருக்கும்முடிவை  பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசுஉடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம் Read More

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் …

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன் Read More

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை

இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்கக் கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லைஎன  நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார். இது குறித்து தில்லியில் உள்ள பத்திரிகை தகவல்அலுவகத்தின் தேசிய ஊடக மையத்தில் இந்த வாரதொடக்கத்தில் அளித்த பேட்டியில் டாக்டர் வி.கே.பால்கூறியதாவது: ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோன வகைகண்டறிப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாககண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)).   இதுகவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC).  இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக்கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும். இப்போதைக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மைபற்றி எங்களுக்கு தெரியாது. இந்த மாறுபட்ட கொரோனா நம் நாட்டில் இருக்கிறதாஎன்பதை கண்காணித்து, அதற்கேற்ப சுகாதாரநடவடிக்கைகளை எடுப்பதுதான் நாம் மேற்கொள்ளவேண்டிய வழி. இந்த மாற்றத்தின் விளைவை நாம் அறிவியல்பூர்வமாக கண்காணிக்க வேண்டும். இந்த மாறுபட்ட வகைகொரோனா நம் நாட்டுக்கு வெளியே கண்டறிப்பட்டுள்ளது.  இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கொவிட்கூட்டமைப்பு(இன்சாகாக்) மூலம் கண்காணிக்க வேண்டும்.  இதுதான், இந்த அமைப்பில் உள்ள 28 ஆய்வு மையங்களின்எதிர்காலப் பணி.  இந்த அமைப்பு இதை தொடர்ச்சியாககண்காணித்து ஆய்வு செய்யும். இந்த மாறுபட்ட கொரோனா, கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைநமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும்அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் அதே விதிமுறைகளும்அடங்கியுள்ளன. கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், எந்த வகை மாறுபட்ட கொரேனாவையும் சமாளிக்க முடியும். தொற்றுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். இந்த பரவல் சங்கிலியை நாம் முறித்துவிட்டால், எந்த வகைமாறுபட்ட கொரோனா பரவலையும், நம்மால் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை Read More

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசின் புது டில்லிக்காண சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன் அமைச்சர் துரை முருகன்  முன்னிலையில் புதுடில்லி வைகை தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள சிறப்பு சிறப்பு பிரதிநிதியின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் மாண்புமிகு பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், செந்தில்குமார், சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்  T.R.V.S.ரமேஷ், பொன் …

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார் Read More

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாடவாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களதுபசியினை போக்கும் விதமாகவும், அரசுமருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும்நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரைநாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு மாண்புமிகுமுதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டுஉணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. ​ இதற்கான போதிய நிதி வசதி இல்லாததிருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும்அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.  இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின்மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்டஉணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரைதொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும்திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மையநிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும்நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார் Read More

அண்ணாநகர் பகுதியில் 14 வயது சிறுமியைஅழைத்துச் சென்று குடும்பம் நடத்தியசிறுமியின் உறவினர் கைது.

சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில்வசித்து வந்த 14 வயது சிறுமியின் தாய் இறந்துவிட்டதால், அச்சிறுமியின் தாத்தா, பாட்டி சிறுமியை வளர்த்துவந்தனர். இந்நிலையில், 24.12.2020 அன்று சிறுமி அவரதுபெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து கடைக்குசெல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சிறுமியின் பெரியம்மா K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், காணாமல்போன பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. K-3 அமைந்தகரை காவல் நிலையஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரவிசாரணை செய்ததில், காணாமல் போன சிறுமி ஒருஆண் நபருடன் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணைமற்றும் தேடுதலில் ஈடுபட்டு, காணாமல் போன சிறுமியைகடந்த 25.3.2021 அன்று கண்டுபிடித்து மீட்டு விசாரணைசெய்தனர். விசாரணையில், சிறுமியை அவரது மாமாசெல்வகுமார், வ/26, என்பவர் காதலிப்பதாகவும், திருமணம்செய்து கொள்வதாகவும் கூறி அழைத்துச் சென்றுதிருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாகதெரிவித்தார். பின்னர் மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலஅமைப்பு வாரியம் மூலம் குழந்தைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். மேலும் மேற்படி வழக்கானது, W-7 அண்ணாநகர்அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றம்செய்யப்பட்டு, காணாமல் போன பிரிவில் பதியப்பட்டவழக்கு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றம்செய்யப்பட்டது. W-7 அண்ணாநகர் AWPS காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரதேடுதலில் ஈடுபட்டு, சிறுமியை அழைத்துச் சென்றுதிருமணம் செய்து தலைமறைவான செல்வகுமார், வ/26, த/பெ.கணேசன், எண்.19/13, அன்னை சத்யா நகர் முதல்தெரு, வில்லிவாக்கம், என்பவரை நேற்று (14.6.2021) கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் எதிரி செல்வகுமார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டார்.

அண்ணாநகர் பகுதியில் 14 வயது சிறுமியைஅழைத்துச் சென்று குடும்பம் நடத்தியசிறுமியின் உறவினர் கைது. Read More