மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை

தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றார்கள்.  இசைத் தொழிலை நம்பியே வாழ்கின்றார்கள். கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள் அமைச்சர் …

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை Read More

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடந்து  முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது, புதிய அமைச்சரவை என்னுடைய தலைமையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முதலில் டெல்லி தலைநகருக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மாலை நேரத்தில் இங்கு …

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல்

நாள்பட்ட இடுப்பு வலி, யோகா மூலம் குறைவது, எய்ம்ஸ்டாக்டர்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. யோகா அடிப்படையிலான ஆய்வுகள் பெரும்பாலும், நோயாளியின் அனுபவம்,  வலி மற்றும் இயலாமை மதிப்பீடு, குணமடைதல் ஆகியவற்றை சார்ந்தே இதுவரை உள்ளன. வலி, வலி சகிப்புத்தன்மை மற்றும் உடலின்நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளவிடும்ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் நாள்பட்ட இடுப்புவலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல்நெகிழ்வுதன்மையை  அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.  நாள்பட்ட இடுப்பு வலியில்,  யோகாவின் தாக்கத்தைமதிப்பிட புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல்துறை கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் ரேணு பாட்டியா, டாக்டர் ராஜ் குமார் யாதவ், மருந்து மற்றும் மறுவாழ்வுத்துறைஉதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீ குமார் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.  3 ஆண்டுகளாக இடுப்பு வலியால் அவதிப்படும் 50 வயதுநோயாளிகள் 100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 4 வாரங்கள் மேற்கொண்ட முறையான யோகாபயிற்சிக்குப்பின்,  அவர்களிடம் உணர்வு அளவீட்டுபரிசோதனை (QST) மேற்கொள்ளப்பட்டது. இதில்குளிர்காலத்தில் ரத்தம் ஓட்டம் குறைவால் ஏற்படும் இடுப்புவலி குறைந்துள்ளது. வலியை தாங்கும் சகிப்பு த் தன்மை அதிகரித்துள்ளது. நோயாளிகளிடம்  பெருமூளையின்செயல்பாடுகள் உற்சாகம் அடைந்து, நெகிழ்வுதன்மைகுறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.  நாள்பட்ட இடுப்பு வலியுள்ள நோயாளிகள், 4 வாரங்கள்யோகா பயிற்சி மேற்கொண்டபின், வழக்கமானசிகிச்சையை விட வலி குறைந்துள்ளது, முதுகுத்தண்டின்நெகிழ்வு அதிகரித்துள்ளது. வீட்டில் நீண்ட காலம் யோகா செய்தால், செலவில்லாமல் அதிக பலன்களை பெற முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது. இது வலியை மட்டும் போக்காமல், ஒட்டுமொத்த வாழ்க்கைதரத்தை மேம்படுத்தி, சுகாதார பலன்களை அளிக்கிறது.

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல் Read More

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர்

சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள  நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு  உதவ  ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற ஒருங்கிணைந்த உதவி மையம் பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் 24×7 இயங்கி வருகிறது.இதன் மூலம் சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் இருப்பிடம் …

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர் Read More

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி – அரசுக்கு அறிவுறுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் டி. ஜெ. நவநீதன்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு  செய்தி துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்களின் கவனத்திற்கு: கொரோனாவைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரைப்பட தொழில், …

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி – அரசுக்கு அறிவுறுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் டி. ஜெ. நவநீதன் Read More

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன்

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் …

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் Read More

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி

தொரட்டி  பட நாயகன் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார் …

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி Read More

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது

பாதிக்கப்பட்ட சுசில்அரி இன்டர்நெஷ்னல் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் மீது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவருடைய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மூன்று …

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இந்திய நாடுமுழுவதும் பரவிக்கிடக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியனவற்றைதனியாருக்கு விற்க, தனியார்மயமாக்க எடுத்து வரும்நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது.  வருத்தத்திற்குரியது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1937-ல்தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போதுதமிழ்நாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டகிளைகளோடு குக்கிராமங்கள் வரை பரவலாகசெயல்படக் கூடிய வங்கியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  அதே போல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ​வங்கிகள் இணைப்பு என தொடங்கி சிலவங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்து, தற்போதுபெரிய வங்கிகளை தனியார் மயமாக்குவதால்வங்கிகளின் வரவு செலவு மற்றும் நாட்டின்பொருளாதாரத்தை ஒரு சில தனிப் பெரும்முதலாளிகளிடம் ஒப்படைத்து மக்கள் தனியாரிடம்கையேந்தும் நிலைக்கு தள்ளப்படப் போகிறார்கள்,  ​காங்கிரஸ் அரசு அன்னை இந்திராகாந்திஅம்மையார் தலைமையில்  தனியார் வங்கிகளைதேசிய உடமையாக்கியது.  ஆனால் இன்றோ மத்தியபா.ஜ.க அரசு முற்றிலும் எதிர்மறையாகதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியார்மயமாக்கி இந்த தேசத்தை 40 ஆண்டுகளுக்குபின்னோக்கி இழுத்துச் செல்ல முனைகிறது.  இந்நிலையில் வங்கிகளில் பணியாற்றும்பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், லட்சக்கணக்கான அவர்களின் குடும்பத்தினர்மட்டுமின்றி பல கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே வங்கிகள் தனியார்களுக்கு விற்க இருக்கும்முடிவை  பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசுஉடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம் Read More

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் …

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன் Read More