சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம், 1.25 கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின்மதிப்பு ரூ. 63.20 லட்சம். தங்கத்தை கடத்தி வந்த நபர்கைது செய்யப்பட்டார்.  உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்துசென்னை வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த கபரிசமினோ ஜேசய்யா(26) என்பவரிடம் சுங்க அதிகாரிகள்சோதனை நடத்தினர். அப்போது அவரது பெல்ட் மற்றும்ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்து  9 பாக்கெட்டுகளில் 1.42 கிலோ எடையில் தங்க பசைகள் பறிமுதல்செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 1.25 கிலோஎடையுடைய சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.63.20 லட்சம். இதையடுத்து ஜேசய்யா கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாகசென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர்தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்   டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒட்டல் பிரிவு மற்றும் இதர பிரிவுகள், அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அமைச்சர் ஆய்வு Read More

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில்   தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவிட் பேரிடர் காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தரக்கூடிய உணவுகள், …

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் Read More

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021)

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம். தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.  கடந்த காலங்களில், இந்தியாவின் …

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021) Read More

பாதுகாப்பு படை வீரர் என்று சொல்லி ஆன்லைனில் மோசடி

வடபழநி-மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் எனக் கூறி, வீட்டு உபயோக பொருள் விற்பனையாளரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில், கிளை மேலாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன், 35. இவரை …

பாதுகாப்பு படை வீரர் என்று சொல்லி ஆன்லைனில் மோசடி Read More

மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது —————————

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் நிர்வாகிகள், ஆறு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை அடையாறு பகுதியில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின், இந்நாள் …

மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது ————————— Read More

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் மும்பையின் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 9- பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. …

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு Read More

அமைச்சர் பி.கே.சேகர்பாபுவைப்போல் வக்போர்டு தலைவர் செயல்பட வேண்டும் – வெளிநாடு தமிழரின் கோரிக்கை

வக்ஃபோர்டு அதிகாரிகளுக்கும், வக்ஃபோர்டு ஊழியர்களுக்கும், மட்டும் அல்லாது வக்ஃபோர்டுக்கு தலைவராக, (சேர்மெனாக) உறுப்பினர்களாக வரத்துடிக்கின்ற ஜாம்பவான்களுக்கும் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களைபோன்ற தெளிவான நடவடிக்கை வரவேண்டும் என்பதற்காக இந்த பதிவை வெளிப்படுத்துகிறேன். சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான 5-ந்து …

அமைச்சர் பி.கே.சேகர்பாபுவைப்போல் வக்போர்டு தலைவர் செயல்பட வேண்டும் – வெளிநாடு தமிழரின் கோரிக்கை Read More

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென்கிறார் டாக்டர் குழந்தைசாமி

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. தற்சமயம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாது.  மற்றவர்கள் போட்டுக் கொள்ளலாம். அதிலும் பாலூட்டும் தாய்மார்கள்கூட இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.  கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான …

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென்கிறார் டாக்டர் குழந்தைசாமி Read More

காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடிப்பு

செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர். புயலை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  உயிர்சேதம் மற்றும் பொருள் சேதத்தைதவிர்க்க முடியும். இதுவரை, தொலை உணர்வுசெயற்கை கோள்கள் மூலம் புயுல் உருவாவது முன்கூட்டியேகண்டறியப்பட்டு வந்தது. வெப்பமான கடலின் மேல் பரப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதிஉருவான பின்பே, செயற்கைகோள் படங்கள் மூலம் இவற்றை அறிய முடியும். இந்தகண்டுபிடிப்புக்கும், புயல் தாக்குவதற்கும் அதிக இடைவெளி இருப்பது, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாவதை செயற்கைகோள்படம்பிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் உருவாகிறது. இந்த புயல் சுழல்தான், காற்றழுத்ததாழ்வு பகுதியை உருவாக்கும் முக்கிய அம்சம். இந்த காற்றுச்சுழலை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை காரக்பூர் ஐஐடி விஞ்ஞானிகள்ஜியா ஆல்பர்ட், விஷ்ணுப்பிரியா சாகு மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இவர்களின் ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும்தொழில்நுட்பதுறையின் கீழ் உள்ள பருவநிலை மாற்ற திட்டம் (CCP) உதவியது. இந்த காற்றுச் சுழலை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் மூலம் வடஇந்திய பெருங்கடல்பகுதியில் உருவாகும் புயல்களை செயற்கைகோள் கண்டறிவதற்கு முன்பே கண்டறியமுடியும். இந்த ஆய்வு கட்டுரை ‘அட்மாஸ்பெரிக் ரிசர்ச்’ என்ற இதழில் சமீபத்தில்வெளியாகியுள்ளது

காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடிப்பு Read More