மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கவேண்டுமென்கிறார் கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதைத் தமிழக அரசு ரத்துசெய்திருக்கிறது. ஆனால், நீட் தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசுமுயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நீட்தேர்வினால் அரசுப் பள்ளிகளில் படிக்கிற பின்தங்கிய, ஒடுக்கப்பட்டசமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிற அநீதிநடைபெற்று வருகிறது.  சமீபத்தில் வெளிவந்த புள்ளி விவரத்தின்படி கடந்த 15 ஆண்டுகளில்அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாமல் கடும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளனர். கடந்த 2006 முதல் 2016 வரை அரசுப் பள்ளிகளில் படித்த 340 மாணவர்கள் மட்டுமேமருத்துவக் கல்லூரியில் சேருகிற வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில்விதிவிலக்காக 2007 ஆம் ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் படித்த 62 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பைப்பெற்றனர். ஆனால், 2013 ஆம் ஆண்டில் மிக மோசமாக வெறும் 18 மாணவர்கள்மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். நீண்டகாலமாக அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில்சேருகிற வாய்ப்பு, இத்தகைய அவலநிலையில் தான் உள்ளது. 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த700 மாணவர்களுக்கு நீட் மூலமாக தேர்வு பெற்றிருந்தாலும், இதில் 9 மாணவர்களுக்குத் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்தது. நீட் தேர்வின் காரணமாக அநீதி அதிகரித்ததே தவிரகுறையவில்லை.  இந்த அநீதியைப் போக்குவதற்குத் தான் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர313 மாணவர்களுக்கும், பல் மருத்துவ படிப்பிற்கு 92 மாணவர்களுக்கும்கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அதாவது, அரசுப் பள்ளியில் படித்த405 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகிடைத்தது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வை 8.41 லட்சம் பேர்எழுதினர். இதில் 3.44 லட்சம் பேர் (41 சதவிகிதத்தினர்) அரசுப் பள்ளிமாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில்மொத்தம் 3,400 இடங்கள் உள்ளன. தமிழக அரசின் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு காரணமாக மொத்தமுள்ள 3,400 இடங்களில் அரசுப் பள்ளியில்படித்த 405 மாணவர்களுக்குத் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீதமுள்ளமூவாயிரம் இடங்களில் சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய அநீதியைப் போக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதேநேரத்தில் தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தநடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.  எனவே, நீட் தேர்வினால் இழைக்கப்பட்டு வரும் அநீதியைப்போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக முதலமைச்சர்தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தீவிரமாக எடுக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்விற்கு மாற்றாக எந்த அடிப்படையில்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது என்பதுகுறித்து வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களது பரிந்துரையை ஏற்றுதமிழகத்தில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிஇடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைஅமைந்திட, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குமுன்னுரிமை வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கவேண்டுமென்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

தி மேமிலி மேன் 2 தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தோடுள்ள வர்த்தகம் நிறுத்தப்படுமென எச்சரிக்கிறார் பாரதிராஜா

எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2  இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த …

தி மேமிலி மேன் 2 தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தோடுள்ள வர்த்தகம் நிறுத்தப்படுமென எச்சரிக்கிறார் பாரதிராஜா Read More

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பத்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியேவருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரியஅனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுகாவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கைசெய்து வருகின்றனர்.  2.​ இன்று (6.6.2021) காலை 7.45 மணியளவில்சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் காவலர்கள் வாகனதணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, காரில்உரிய அனுமதியின்றி பெண் ஒருவர் முகக் கவசம்அணியாமல் வந்தவரை, காவல்துறையினர் நிறுத்திவிசாரணை செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பெண்முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500  அபராதம்விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம்தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார். 3.​சம்பவயிடத்திற்கு வந்த பெண், போலிசார் வழங்கியரசீதை வாங்கி கீழே ஏறிந்து விட்டு, முகக் கவசம்அணியாமல் தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்று உரக்கசப்தமிட்டு காவல்துறையினரை பணி செய்யவிடாமல்தடுத்து மிரட்டியுள்ளார். மிரட்டிய பெண் வழக்குறைஞர்தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தைசேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்துசம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டுகாவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில்மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b)506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது. 4.​தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி முன் களபணியில் இருந்து வரும்  அனைத்து அரசுதுறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள்ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்றுகுறைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின்நடவடிக்கைகளில் பொதுமக்களிடம் கனிவுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனகாவல்ஆணையர் உத்தரவு பிறபித்துள்ளார். காவல் துறையினர் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணி செய்துவருகின்றனர். 5.​மேற்கண்ட வாகன தணிக்கையில் நடைபெற்றசம்பவம் விரும்பதகாத வகையில் நடைபெற்று உள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தினுடையவழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்துகாவல்துறையினருக்கு ஊரடங்கை அமல்படுத்துவதற்க்குமுழு ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பத்வு Read More

உடலின் மொழி – டாக்டர் சங்கர்

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். தொண்டை வரைக்கும்  அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும். 1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.  2.இரைப்பை வாந்தி மூலம் …

உடலின் மொழி – டாக்டர் சங்கர் Read More

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்கு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியேவருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரியஅனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுகாவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கைசெய்து வருகின்றனர்.   2.​ இன்று (6.6.2021) காலை 7.45 மணியளவில்சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் காவலர்கள் வாகனதணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, காரில்உரிய அனுமதியின்றி பெண் ஒருவர் முகக் கவசம்அணியாமல் வந்தவரை, காவல்துறையினர் நிறுத்திவிசாரணை செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பெண்முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500  அபராதம்விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம்தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார். 3.​சம்பவயிடத்திற்கு வந்த பெண், போலிசார் வழங்கியரசீதை வாங்கி கீழே ஏறிந்து விட்டு, முகக் கவசம்அணியாமல் தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்று உரக்கசப்தமிட்டு காவல்துறையினரை பணி செய்யவிடாமல்தடுத்து மிரட்டியுள்ளார். மிரட்டிய பெண் வழக்குறைஞர்தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தைசேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்துசம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டுகாவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில்மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b)506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது.  4.​தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி முன் களபணியில் இருந்து வரும்  அனைத்து அரசுதுறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள்ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்றுகுறைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின்நடவடிக்கைகளில் பொதுமக்களிடம் கனிவுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனகாவல்ஆணையர் உத்தரவு பிறபித்துள்ளார். காவல் துறையினர் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணி செய்துவருகின்றனர்.  5.​மேற்கண்ட வாகன தணிக்கையில் நடைபெற்றசம்பவம் விரும்பதகாத வகையில் நடைபெற்று உள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தினுடையவழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்துகாவல்துறையினருக்கு ஊரடங்கை அமல்படுத்துவதற்க்குமுழு ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்கு Read More

நடுக்கடலில் உடல்நிலை பாதித்த கப்பல்கேப்டனை துரிதமாக மீட்டது இந்திய கடலோரகாவல்படை

கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிககப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படைஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில்சேர்த்தது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்புமையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்குஇன்று காலை 4.30 மணியளவில் ஒரு அவசர அழைப்புவந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல்மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்குகப்பலில்,  50 வயதான தென்கொரிய கேப்டனுக்குஅவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவாவிலிருந்து இந்திய கடலோர காவல்படை கப்பல் சி-158, மீட்பு பணிக்கு இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. மீட்பு பணியை துரிதமாகமேற்கொள்ள கடலோர காவல் படையின் சேத்தக் ரகஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது. மோசமானவானிலையிலும், அந்த ஹெலிகாப்டர் மார்ஷல் தீவைச்சேர்ந்த எம்.டி.சலீம் என்ற அந்த கப்பலை நெருங்கியது. ஹெலிகாப்டரில் சென்ற டைவர் கப்பலில் இறங்கிநோயாளியை பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏற்றினார். கோவாவின் வாஸ்கோ நகரில் எஸ்எம்ஆர்சிமருத்துவமனையில், சரக்கு கப்பல் கேப்டன்சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நன்றாகஉள்ளது.

நடுக்கடலில் உடல்நிலை பாதித்த கப்பல்கேப்டனை துரிதமாக மீட்டது இந்திய கடலோரகாவல்படை Read More

இந்தியாவில் கொவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனாதொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,460 ஆகக்குறைந்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து 10-வது நாளாகஅன்றாட புதிய பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் கீழ்பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 14,77,799 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்டமொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதமாகும். இந்தஎண்ணிக்கை 6-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாகஏற்பட்டுள்ளது.சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 77,449 சரிந்துள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரிகுணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்கள்.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்குஆளானவர்களை விட கூடுதலாக 74,772 பேர்குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படிகுணமடைந்தவர்களின் விழுக்காடு 93.67 சதவீதமாகஅதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 36,47,46,522 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 6.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 5.62 சதவீதமாகவும்பதிவாகியுள்ளது. தொடர்ந்து 13 நாட்களாக இந்தஎண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி 

இந்தியாவில் கொவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு Read More

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதமெழுதிய ஸ்டாலினை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி

சிபிஎஸ்இ என்கிற மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பு ஆண்டு பொதுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, “மாணவர் உடல் நலன் மற்றும் உயிர் பாதுகாப்பில் ஒரு துளியும் சமரசம் …

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதமெழுதிய ஸ்டாலினை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி Read More

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றடைந்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது 3.6.2021 அன்றுஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இந்நோயால் இறந்தது. சிங்கங்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று ஹைதராபாத் உயிரியல் …

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றடைந்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார் Read More

விடுதலைப்புலிகளையும்  கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு தடை விதிக்க வலியுறுத்துகிறார் வேல்முருகன்

சமூக நலத்தையே முதன்மைப்படுத்து கின்ற அறநோக்கு பண்பு கொண்டது தமிழர் அறம். ஆனால் இதை  எல்லாம் புரிந்து கொள்ளாத சிலர், அறிவார்ந்த தமிழ் சமூகத்தை கொச்சைப் படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச்  சேர்ந்த  இயக்குனர் ராஜ் மற்றும் டீகே …

விடுதலைப்புலிகளையும்  கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு தடை விதிக்க வலியுறுத்துகிறார் வேல்முருகன் Read More