+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார்

மத்திய அரசு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வைரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பெற்றோர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கேட்டு வருகிறது. அதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கொரோனா தாக்கம் குறைந்தபிறகு தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிப்பதாகவே அறிகிறேன். தற்போதைய கொரோனா சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு எந்தஅளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அதேஅளவிற்கு, கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகசெயல்படும் தமிழ்நாடு அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தைஉருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவதும் அவசியம்.  ஆனால், இந்த இக்கட்டான 2-வது அலை தாக்கத்தில் மாணவர்களுக்குபாதிப்பில்லாத வகையில் தேர்வு நடத்துவதற்கானசாத்தியக்கூறுகளை நன்கு ஆராய்ந்து, ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மிகாமல் பகுதியாக பிரித்து தேர்வு நடத்தவாய்ப்பிருந்தால், கொரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின்பு நடத்தவேண்டும். ஏனெனில், தற்போதைய சூழலால் உயர்கல்விக்கு அடித்தளமான 12 ஆம் வகுப்பு தேர்வுகளை சந்திக்காமல் மாணவர்கள் கடந்துசெல்வார்களேயானால், நிச்சயம் வேலைவாய்ப்பில் பல்வேறுசிக்கல்களை சந்திப்பார்கள். ஏற்கெனவே வேலைவாய்ப்பின்றிலட்சக்கணக்கான இளைஞர்கள் அவதியுறும்சூழலில், இந்தமாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, மாணவர்களின்எதிர்காலம் கேள்விக்குறியாகாதபடி, மாணவர்களின் பாதுகாப்பைஉறுதி செய்து தேர்வு நடத்த வேண்டும் என அகில இந்திய சமத்துவமக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார் Read More

இந்தியாவில் 2021 மே மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ 1,02,709 கோடி 

2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ₹ 1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ₹ 17,592 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ₹ 22,653கோடியாகவும், ஐஜிஎஸ்டி ₹ 53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ் ₹ 9,265 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 868 கோடியாகவும் சேர்த்து) உள்ளது.  கொவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 2021 மே …

இந்தியாவில் 2021 மே மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ 1,02,709 கோடி  Read More

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார்

பிரதிப்குமார், இ.கா.ப., அவர்கள்சென்னை பெருநகர காவல், போக்குவரத்துகூடுதல் ஆணையாளராக இன்று (05.6.2021)பொறுப்பேற்றுக் கொண்டார்

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார் Read More

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார். 

அண்ணா பல்கலைக்கழக  விடுதி  வளாகத்தில்காவல் துறையினருக்கான  கோவிட்-19 கேர்சென்டரில்  கொரோனா தொற்றால்  பாதிப்படைந்துசிகிச்சை பெற்று வரும்  காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை நேற்று (04.06.2021) சென்னைபெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கவச  உடை அணிந்து  நேரில்   நலம் விசாரித்து, ஆறுதல் கூறியும்பழத்தொகுப்புகளையும் வழங்கினார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுசிகிச்சையில் இருந்த தலைமைக்காவலர் K.சிகாமணிஎன்பவரது 10 வயது மகளான ஸ்ருதி என்ற பெண்அவரது தாய் தேவியுடன் கொரோனா நோய் தொற்றுசிகிச்சை பெற்று வந்த சிறுமி ஸ்ருதி தான்தனிமைபடுத்தப்பட்ட நாட்களில் பாதிக்கப்பட்டநிலையிலும் முன்களப்பணியாளர்களாக அரிப்பணிப்புஉணர்வுடன் பணி செய்து மக்களை காத்துவரும்மருத்துவ துறையினர், காவல் துறையினர் மற்றும்சுகாதார அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தான் வரைந்த “THANK YOU WARRIORSSAVING –  OUR LIVES” என்ற வாசகம் கொண்டஓவியத்தை கவச உடையில் ஆறுதல் கூற வந்த காவல் ஆணையரிடம் நேரில் வழங்கி தனது நன்றியைநெகிழ்வுடன் தெரிவித்தார். இந்த ஓவியம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார்.  Read More

தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.. என். இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் …

தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு! Read More

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டையில்  நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து, 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் …

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய …

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 Read More

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 9 சிங்கங்களுக்கு கொரோனாவாம்: ஒரு பெண் சிங்கம் இறந்தது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 12 சிங்கங்கள் இருந்தன. இந்த சிங்கங்களுக்காக 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 வயது நீலா என்ற பெண் சிங்கத்திற்கு மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் அதிகம் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஆனாலும் அது இறந்தது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 9 சிங்கங்களுக்கு கொரோனாவாம்: ஒரு பெண் சிங்கம் இறந்தது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத்தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாகசென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்தவிமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கைசந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில்அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து சுங்கஅதிகாரிகள் விசாரித்தனர். அவர் பதற்றம் அடைந்துமுன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்த போது, அதில் 8 பிளாஸ்டிக் பைகள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன.  பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின்  பவுடர்என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்தஇந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தைமதிப்பு ரூ.70 கோடி. இவைகள் போதைப் பொருள் மற்றும்சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை கடத்திவந்த இரு பெண்களிடம் நடத்தியவிசாரணையில், ஒருவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்துதில்லியில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில்சிகிச்சை பெற வந்தார் என்றும், அவருக்கு உதவியாக தென்ஆப்பிரிக்காவின்   கேப்டவுன் நகரில் வசிக்கும் மற்றொருபெண்ணும் வந்தது தெரியவந்தது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சென்னையில்இறங்கினர். இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக மேலும்விசாரணைகள் நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேசவிமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது Read More

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக திகழ்வதற்கான  முயற்சிகளை மும்முரமாக எடுத்து வரும் இந்திய ரயில்வே, கரியமில வாயுவை முற்றிலும்வெளியிடாத அமைப்பாக 2030-ம் ஆண்டுக்குள் உருவெடுக்க  இருக்கிறது. மிகப்பெரிய மின்மயமாக்கல், தண்ணீர் மற்றும் காகிதசேமிப்பு, ரயில் பாதைகளில் அடிபடாமல் விலங்குகளைபாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை இந்தியரயில்வே எடுத்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்குஉகந்த மற்றும் மாசை குறைக்கும் ரயில்வேமின்மயமாக்கல், 2014-ம் ஆண்டில் இருந்து பத்து மடங்குஅதிகரித்துள்ளது. சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும் போது சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் ரயில் போக்குவரத்தின்மூலம் பெருந்தொற்றின் போது உணவு தானியங்கள்மற்றும் ஆக்சிஜன் நாடு முழுவதும் எடுத்துசெல்லப்பட்டது. இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளுக்காகஜூலை 2016-ல் இந்திய ரயில்வே மற்றும் இந்தியதொழில் கூட்டமைப்புக்கு (சிஐஐ) இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 39 பணிமனைகள், 7 உற்பத்தி மையங்கள், 8 லோகோஷெட்கள் மற்றும் ஒரு சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்கு‘கிரீன்கோ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும். 19 ரயில் நிலையங்களுக்கும் பசுமை சான்றிதழ்கிடைத்துள்ளது. 3 பிளாட்டினம், 6 தங்கம் மற்றும் 6 வெள்ளி மதிப்பீடுகள் இவற்றில் அடங்கும். 27 ரயில்வேகட்டிடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் மற்றும் இதரஇடங்களுக்கும் பசுமை சான்றிதழ் கிடைத்துள்ளது. 15 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும்.இதைத் தவிர, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை கடந்த 2 வருடங்களில் 600 ரயில்நிலையங்கள் பெற்றுள்ளன. மொத்தம் 718 ரயில்நிலையங்கள் ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை பெற்றுள்ளன.

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது Read More