சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.  

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல்அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ..., அவர்கள்முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /இந்திய மருத்துவம் மற்றும்ஹோமியோபதி ஆணையாளர் திருமதி மைதிலி கே. ராஜேந்திரன், ..., அவர்கள் தலைமையில் (20.11.2023)  ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.  

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2024 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம்2024இன் கீழ் வாக்காளர் பட்டியல் வெளியிட உத்தரவிட்டது, அதன்படி சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 அன்று அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சியினர் முன்னிலையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையாளர் (வருவாய் () நிதி) அவர்களால் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக 27.10.2023 முதல்09.12.2023 வரை பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும்அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்திஅடைபவர்கள் படிவம் 6- பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7- பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதியவசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8- பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினைஇணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலஅலுவலரின் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்ககேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 25.11.2023 மற்றும் 26.11.2023 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அந்த முகாம் நாட்களையும் படிவங்கள் 6, 6A. 7 மற்றும் 8 வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் https://voters.eci.gov.in/ என்றஇணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இப்பணிகளை ஆய்வு செய்ய சென்னை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளராக இந்தியமருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் திருமதி மைதிலி
கே. ராஜேந்திரன், ..., அவர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்அவர்கள் முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ இந்திய மருத்துவம் மற்றும்ஹோமியோபதி ஆணையாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் பதிவு அலுவலர்கள், உதவி தேர்தல் பதிவுஅலுவலர்களுடனான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையாளர் (வருவாய் () நிதி)  திருமதிஆர்.லலிதா, ..., கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.பி.அமித், ..., (தெற்கு), திரு.கே.ஜெ.பிரவீன் குமார், ..., (மத்தியம்), திரு.கட்டா ரவி தேஜா, ..., (வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) (பொ) திரு.குலாம் ஜிலானி பாபா, தேர்தல் பதிவுஅலுவலர்கள், உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.