ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் நகைச்சுவை படம் பூஜையுடன் துவங்கியது

ட்வர்க புரடெக்‌ஷன் தயாரிப்பில், பிளேஸ் கண்ணன்ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும்ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் நகைச்சுவை படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் துவங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  நடைபெற்று வருகிறது. ஒரு மருத்துவமனையில் செவியளராக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான நகைச்சுவையுடன் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.******

தொழில்நுட்ப குழு தயாரிப்புபிளேஸ் கண்ணன் (Dwarka Productions) எழுத்து இயக்கம்ரா.சவரி முத்து ஒளிப்பதிவுதமிழ் A அழகன் இசை – D இமான் படத்தொகுப்புசரத் குமார் கலைசுரேஷ் கல்லேரி சண்டைசுகன் நடனம்ஷெரிப் ஒப்பனைசுரேஷ் ஆடை வடிவமைப்புஷேர் அலி உடைகள்ரமேஷ் புகைப்படம்அன்பு நிர்வாக தயாரிப்புநிதின் கண்ணன் தயாரிப்பு மேற்பார்வைஅழகர் குமரவேல் மக்கள் தொடர்புசதீஷ் (AIM) விளம்பர வடிவமைப்புசபா டிசைன்ஸ்