ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் ” முத்து என்கிற காட்டான் ” வெப் சீரிஸின் சுவாரஸ்யமான முன்னோட்டக் காணொளியை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து முன்னோட்டத்தை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது ஒரு காணொளியை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.*****
டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.

