விஜய் சேதுபதி, சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட பதாகை

கே.வி.மீடியா  தயாரிப்பாளர் பி.செந்தில்நாதன் வழங்க, டி.ஆர்.விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளபிரம்ம முகூர்த்தம்படத்தின் முதல் பதாகையை  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்  ஆகியோர் வெளியிட்டனர். இளம் நாயகன்  விஜய் விஷ்வா நாயகனாக  நடிக்க, அபர்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், சி.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர். கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.*******

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின்படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப்  பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.  இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:  தயாரிப்பு நிறுவனம் – KV Media தயாரிப்பாளர்  P செந்தில்நாதன் கதை திரைக்கதை இயக்கம் – TR விஜயன் வசனம்  ஜாபர் இசைஶ்ரீ சாஸ்தா ஒளிப்பதிவு – EJ.நவ்ஷாத் பாடல்கள்சினேகன், C. பாலமுருகன், A.P. ராஜா.  எடிட்டர்  பிரவீன் குமார் நடனம்சேஷவ் தபூர் சண்டைப்பயிற்சிபம்மல் ரவி மக்கள் தொடர்பு – A.ராஜா