‘ஒரு நொடி’ திரைப்பட விமர்சனம்

மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்ஒரு நொடி”. . இந்த படத்தில் தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், பழ.கருப்பையா,  வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் நடித்திருக்கிறார்கள். தமன் குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். தனது கணவரை காணவில்லை என்று ஒரு பெண்  புகார் கொடுக்கிறார். இச்சமயத்தில் ஒரு இளம் பெண் இவர் எல்லைக்குள் இறந்து கிடக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களையும் விசாரிக்கிறார் தமன்குமார். காணாமல் போனவர் கிடைத்தாரா? இளம் பெண்ணை கொலை செய்தது யார்?  என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. இந்த படத்தை சலிப்புத்தட்டாமல்  அதிர்ச்சியூட்டும் பாணியில்  சுவாரசியமானத் திரைப்படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர் மணிவர்மன். அது மட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்திற்கும் அடியெடுத்து வைத்திருக்கிறார். *******