‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1 ல் வெளியீடு

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில்,  உருவாகியுள்ளபார்க்கிங்யு/ சான்றிதழை  பெற்றுள்ளது என்பதை பேஷன்ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தில் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராமராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ்ஸின் இசை, ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு ஆகியவை இந்தப் படத்தை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றிஇருக்கிறது. பார்க்கிங்திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.*********

இதுபார்வையாளர்களுக்கு சென்னையின் தெருக்களைப் பற்றி  சஸ்பென்ஸான ஒரு பயணத்தை வழங்கஇருக்கிறது. சினிமாத்துறை மற்றும் வர்த்தக வட்டாரங்களில் படம் குறித்தான அறிவிப்பு வந்ததில் இருந்தேகிடைத்துவரும் நேர்மறையான வரவேற்பிற்கு படக்குழுவினர் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றனர்.

பார்க்கிங்படத்திற்கு தற்போது கிடைத்துள்ள இந்த யு/ சான்றிதழ் என்பது அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்துகிறது. பார்வையாளர்களுக்கும் சினிமாஆர்வலர்களுக்கும் சீட்டின் நுனியில் அமரும்படியான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்க இருக்கும்பார்க்கிங்திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.

*பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி பற்றி:* பார்க்கிங்படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பு நிறுவனங்களான பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ்ஃபேக்டரி ஆகியவை தரமான மற்றும் மாறுபட்ட சினிமா அனுபவங்களை கொடுக்கும் அதன் தரத்திற்காகசினிமாத்துறையில் பெயர் பெற்றவை. தமிழ் சினிமாவைத் தாண்டியும் இந்திய சினிமாவிலும் தனது அளப்பறியபங்கை செய்து வருகிறது இந்நிறுவனங்கள்.