“எக்ஸாம்” திரைப்பட விமர்சனம்

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் துஷ்ரா விஜயன், அத்தி பாலன், அப்பாஸ், வசுந்தரா, நரேன் மணி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் தொடர் “எக்ஸாம்”.  காவல்த்துறை துணை கண்காணிப்பளாராக பதவி ஏற்க காரில் தனியாகவரும் அதிதி பாலனை, நடுவழியில் மடக்கிப் பிடித்து ஒரு காட்டுப்பகுதியிலுள்ள ஊரில் இருக்கும் ஒரு மாளிகையில் அடைத்து வைக்கிறார் துஷ்ரா விஜயன்.  பிறகு துஷ்ரா காவல்த்துறை துணை கண்காணிப்பாராக உடையணிந்து அதிதி பாலன் பதவியேற்கவிருந்த காவல் நிலையத்துக்கு போலி காவல் அதிகாரியாக சேர்ந்துவிடுகிறார். ஏன் அவ்வாறு போலி காவல் அதிகாரியாக சேர்ந்தார். உண்மையான அதிகாரியான அதிதி பாலனுக்கும் துஷ்ராவுக்கும் என்ன தொடர்பு?. துஷ்ரா ஏன் போலி அதிகாரியாக நடிக்க வேண்டும்?. ஏன் அதிதி பாலன் காலில் விலங்கிட்டு அடைபட்டுக்கிடக்கிறார்?. அந்த மர்ம மாளிகையிலிருந்து அதிதிபாலன் தப்பித்தாரா? இல்லையா?. போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கி இழத்து வைக்கும் இயக்குநர் ஏ.சற்குணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. துப்பறிதல் முழு நாவலை படித்த திருப்தி பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.  படிக்காமலேயே தேர்வு எழுதாமலேயே அதிகாரியாக வேலையில் சேர முடியும் என்பதற்கு இயக்குநர் விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தியிருப்பது ஏற்புடையதாக இல்லை. என்றாலும் தற்போதைய தேர்தல் முறையும் இயக்குநரின் எண்ணத்திற்கு துணை நிற்கிறது. காவல்த்துறை அதிகாரி தோரணையிலும், மீனவ ஏழைப் பெண்ணின் சகிப்புத்தன்மையிலும் சிறை கைதியின் துன்பத்திலும் மிளர வைக்கிறார் துஷ்ரா விஜயன். அதிதி பாலனுக்கு அதிக வாய்ப்பளிக்கவில்லை என்றாலும், தனக்கு கொடுத்க்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் அதிதி. இப்போக்கை கடைபிடித்தீர்கள் என்றால் துணை நடிகையாகவே திரையுலகம் உங்களை பார்க்கும். விழித்துக் கொள்ளுங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் காணப்பட்டிருக்கிறார் அப்பாஸ். இயக்குநரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் நடித்துக் கொடுத்திருப்பது திரையில் தெரிகிறது. அதிகாரியாகவும், துஷ்ராவின் கதாபாத்திரத்தை இயக்குபவராகவும் நடித்த அப்பாஸ் மூச்சை உள்ளிழுத்து படுத்துக்கிடப்பதை பார்க்க முடியவில்லை. அச்சு அசலாக அப்படியே நடித்த்கிருக்கிறார். சாம் சி.எஸ்.சின் இசை திரைக்கதையோடு இசைந்திருக்கிறது. அளவான பின்னணி இசை. அதற்கேற்றார்போல் அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவும் தொடரின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. “எக்ஸாம்” 7 தொடர்களாக பிரைம் வீடியோவில் வெளிவந்துள்ளது