இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி

முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட  டீன்ஸ்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது. காணொளியை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்திரைப்படத்தின் இசை திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது.*******

இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம்என்பதற்கான சான்றிதழ்டீன்ஸ்திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்றுகுழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம்வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்டீன்ஸ்படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும்இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பிமற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில்டீன்ஸ்தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன்கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.

விரைவில் வெளியாகியுள்ளடீன்ஸ்திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர்தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மாபிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார்.