அல்லு அரவிந்த் வழங்கும் படத்தில் இணைந்தார் சாய் பல்லவி

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி; நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த்வழங்கும் படம் தான் என்.சி.23. இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் படபிடிப்பு  பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, நடிகை சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளார்.*********

இயக்குனர் சந்து மொண்டேடியுடன்யுவ சாம்ராட்நாக சைதன்யாவின் பான்இந்தியா திரைப்படமான#NC23-ன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய ஒரு மாதத்திற்குமுன்பே ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கிய படக்குழு, விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத்திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பன்னி வாசு இப்படத்தை தயாரிக்கிறார், அல்லு அரவிந்த் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல வெற்றிகரமானபடைப்புக்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பு நிறூவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பெருமையுடன்வழங்குகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் NC23 தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை மிக உயர்ந்ததரத்துடன் உருவாக்கப்படுவதை உறுதி செய்கிறது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளின் ஒரு பகுதியாக, இப்படத்தின்முன்னணி கதாநாயகியாக நேற்று அணியில் இணைந்தார் சாய் பல்லவி.