​‘சோனி விழா’ தொலைக்காட்சி இணையதளம் அக்.19 முதல் தொடங்குகிறது

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு இணையதளமான  ‘சோனி விழா’ வரும் அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8:00 (மலேசியா நேரம் இரவு 10.30) மணிக்கு ஒளிபரப்பைத் தொடங்குகிறது. தொடக்க விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் முன்னணி நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் உலகப் புகழ்பெற்ற சமையல் போட்டியின் தமிழ் பதிப்பான இந்நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு முக்கியப் பங்காற்றுகிறார்.  தமிழ் ஐடல் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற ‘ஐடல்’ இசை நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பான ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் இணைகிறார். தமிழ் மக்களுக்கு உலகத்தரத்திலான புதுமையான கதைகள், சர்வதேச தரத்திலான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதே ‘சோனி விழா’ சேனலின் முதன்மை நோக்கமாகும்.