அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜா கலந்து கொண்டார். அவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் டாக்டர் இலியாஸ்,  சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஆளூர் ஆசாத், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.