குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை, செப்டம்பர். 26: குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை இராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில், குருவாடி தொண்டு அறக்கட்டளைத் தலைவர் கே. அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக வணிகர்கள் சேவை சங்கத் தலைவர் கே. சீனி முஹம்மது, கே. அப்துர் ரஹ்மான், எஸ்.டீ. கொரியர் பங்குதாரர் கே. சிராஜுதீன், ஜாக்ஹ் பட்டாபிராம் பொருளாளர் கே. செய்யது கனி, பிரெஞ்சு எக்ஸ்பிரஸ் கொரியர் தலைவர் கே. அபுபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ. லியாகத் அலி வரவேற்புரை ஆற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, ஐ.எப்.டீ. உபத் தலைவர் டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் மௌலவி. கே.எம்.இலியாஸ் ரியாஜி, ஜாமியா அல்ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர் சிதீதுத்தீன் பாஸில் பாகவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆகியோர் ஏற்புரை ஆற்றினார்.

விழாவில், தமுமுக பொதுச் செயலாளர் ஹாஜா கனி, தமிழ்நாடு வக்ப்பு வாரிய உறுப்பினர் பாத்திமா முசாபார், தொழிலதிபர் சிங்கப்பூர் முஸ்தபா, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், தாஜ் குழும நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சலீம், இயக்குனர் பைசல், இராசி டிராவல்ஸ் உரிமையாளர் சிக்கந்தர், புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர் ருமைஸுதீன் பைஜி, சேட் பர்னிச்சர் உரிமையாளர் யூனுஸ் சேட், ஏ.எம்.எஸ். கல்விக்குழுமத் தாளாளர் சேகு ஜமாலுதீன், பல்லாவரம் மூன் டிரேடர்ஸ் உரிமையாளர் சித்திக், காயல் இளவரசு, ஆர்.எஸ்.டி. தர்வேஸ், காயல்பட்டினம் சேக் சதக்கத்துல்லாஹ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். குருவாடி தொண்டு அறக்கட்டளைச் செயலாளர் அஹமது அன்சாரி நன்றியுரையாற்றினார்.