தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்!

மதுரை 28, மே.:- 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி முகாம் மதுரை பைபாஸ் ரோடு போக்குவரத்து தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்த முகாமினை மாநகர சுகாதார அதிகாரியோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பார்வையிட்டார். உடன் சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், கணேசன், ஸ்டாலின், பகுதி செயலாளர் கணேசன், வாலிபர் சங்க தலைவர்கள் செல்வா, கோபிநாத், மாணவர்சங்க தலைவர்கள் வேலுதேவா,பாலா ஆகியோர் உடனிருந்தனர்.