சோனி தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலின் பெயர் மற்றும் அடையாளமாக “சோனி விழா” வை அறிமுகப்படுத்தியது. 2026 அக்டோபரில் தொடங்க உள்ள “சோனி விழா”, தமிழ் பொழுதுபோக்கு உலகில் புதிய பயணத்தை தொடங்குகின்றது. தமிழ் கலாச்சாரம், உணர்வு, மொழி மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆழமாக பிரதிபலிக்கும் பிரீமியம் விஷயங்களை வழங்குவதே “சோனி விழா”-வின் முக்கிய நோக்கமாகும். ஊர் மண்வாசனையுடன் உருவாகும் கதைகள், தரமான தயாரிப்பு, சிறந்த கலைத்திறன் மற்றும் பிரம்மாண்டமான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டு, தமிழகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் வகையில் அமைக்க படுகின்றன.**********
சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலின் சிறப்பு நிகழ்வுடன் Sony VIZHA-வின் பெயரும் லோகோவும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் பெருமையையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான பாடல். தமிழின் பெருமை அனைத்து திசைகளிலும் பரப்ப வேண்டும் என்ற அதன் உணர்வே Sony VIZHA-வின் அடிப்படை என்னமாக அமைந்தது..
தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து உருவாகும் கதைகள் இங்குள்ள மக்களின் அன்பு, நினைவுகள், கனவுகள், ஆசைகள் மற்றும் கலாச்சாரப் பெருமையை பிரதிபலிப்பதோடு, உலகளாவிய பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட உள்ளது… Vizha’ என்ற தமிழ் வார்த்தைக்கு கொண்டாட்டம் அல்லது திருவிழா என்பது பொருள். தமிழ் கதைகள், திறமைகள், இசை, குடும்பம், கனவுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் இணையும் ஒரு கொண்டாட்டமாக Sony VIZHA உருவாகின்றது..

