இயக்கமா? நடிப்பா? .இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய், “கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிக்மா படத்தின் வெளியீட்டுக்குப் பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்”. என்று தெரிவித்தார்.

லைகா புரொடக்சன்ஸ், தமிழ்குமரன் கூறியதாவது:
“மிகவும் கஷ்டப்பட்டு சஞ்சய் இந்தப் படம் எடுத்துருக்கிறார். இனி, இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்”.