அபி ஹாசன், ரத்திகா நடிக்கும் படம் ‘பீட்சா 4’

பீட்சாவரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமானபீட்சா 4′ – கே.ஏ.ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். ரத்திகா நாயகி ஆவார். ******£

எத்தனையோ திறமையான இயக்குநர்களையும் இதர கலைஞர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளதயாரிப்பாளர் சி வி குமார் அவர்களின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம்சினிமாஸ் தயாரிப்பில், ‘பீட்சாவெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாகஉள்ளது. முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பதுசஸ்பென்ஸ்,” என்று இயக்குநர் ஆண்ட்ரூஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘ராட்சசன்‘, ‘மார்க் ஆண்டனிஉள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றியஎஸ் ஜே அர்ஜுன்பீட்சா 4′ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழுஇப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லும் வகையில்பீட்சா 4′ அமையும்,” என்று தெரிவித்தார்.

பீட்சா 4′ குழுவினரின் விவரம் வருமாறு: ஒளிப்பதிவாளர்: ஸ்ரீராம், சண்டை பயிற்சி: ராம்குமார், மேலாளர்: விஜயன் சி வி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்: வெங்கி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதா தங்கராஜ், இசை: ஹரி, கலைஇயக்குநர்: சிவா, காஸ்டியூமர்: செல்வம், ஒப்பபனை: வினோத், படத்தொகுப்பு: ராதாகிருஷ்ணன்.