டி.இமான் இசையில் “மயோன்” பாடல்

டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான   மயோன்பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் உழைக்கக் கூடியவர். . தற்போது, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன்  தயாரிப்பில்சந்தானம் நடிப்பில்  உருவாகியிருக்கும்இங்க நான்தான் கிங்குஎன்ற படத்தின்மாயோனே செல்ல மாயோனேஎன்ற பாடல், இணையத்தில் பரவி வருகிறது.*********

தமிழ் இசை உலகில், ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி.இமான் பாடல்கள். அந்த வரிசையில் இணையம் முழுக்க  REELS-களாக  இப்பாடல்மிகப்பெரிய வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் அனைத்து தரப்பு பெண்களையும்  மிகவும்  கவர்ந்துள்ளது இப்பாடல்.  மாயோனே பாடல் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாகமாறியுள்ளது.  பட வெளியீட்டுக்கு முன்னதாக பாடலுக்குக் கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பால், இசையமைப்பாளர் டி.இமானும் தயாரிப்பாளர் அன்புச்செழியனும் மற்றும்  படத்தின் நாயகன்சந்தானமும்  பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.