ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம்.”* ரசிகர்கள் மீது *நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்.

நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் …

ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம்.”* ரசிகர்கள் மீது *நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல். Read More

அரபு நாட்டுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் முனையம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரகநாடுகளைச் சேர்ந்த DP World குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும்கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2000 கோடி ரூபாய்முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவுமையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடுஅரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டது.      ​ தமிழ்நாட்டில், ஏற்கனவே DP World குழுமம் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 நபர்களுக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில்கன்டெய்னர் முனையங்கள் (Container Terminal), கன்டெய்னர் சரக்கு நிலையங்கள் (Container Freight Stations), சுங்கக் கிடங்குகள் (Bonded Warehouses), குளிர் பதனக் கிடங்குகள் (Cold Storages), உள்நாட்டுக்கிடங்குகள் (Domestic Warehouses) போன்ற பலஉள்கட்டமைப்பு வசதிகளை  நிறுவி உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.     ​இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறைஅமைச்சர்  தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில் துறைமுதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர்  பூஜா குல்கர்னி, இ.ஆ.ப., DP World நிறுவனத்தின்மேலாண்மை இயக்குநர் திரு. ரிஸ்வான் சூமர், தலைமைநிர்வாக அதிகாரி  திரு. ரஞ்சித் ரே மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரபு நாட்டுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் முனையம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது Read More

பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளிகளுக்கு ரூ.10000 நிவாரணத் தொகை – முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே மாண்புமிகு உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தரவேண்டுமென்று ஒரு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார்.  நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமல்ல; இந்த மன்றத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் – ஏன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய …

பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளிகளுக்கு ரூ.10000 நிவாரணத் தொகை – முதல்வர் ஸ்டாலின் Read More

ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அடிமையாக இருக்காதென்றார் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் அடிமையாக இருக்காது என்று சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் திமுக மாநில மாணவரணி, மாவட்ட,மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் …

ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அடிமையாக இருக்காதென்றார் உதயநிதி ஸ்டாலின் Read More

வீடுகளில் பிள்ளையாரை வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கலாம் – அமைச்சர் சேகர்பாபு

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிபர்களிடம் கூறும்போது வீடுகளில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு நீர் நிலைகளில் கரைக்கலாம் என்று தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடத்த கொரோனா தொற்று காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இது மாநில …

வீடுகளில் பிள்ளையாரை வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கலாம் – அமைச்சர் சேகர்பாபு Read More

மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ – பாரதியின் வரிகளைக் காற்றில் பறக்கவிட்டு, நூற்றாண்டுகளைக் கடந்தும் மாதர்களைச் சீரழிக்கும் மடமைகள் தொடர்வது கொடுமை..! பல்வேறு சமூகத் தடைகள் காரணமாக, பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய முன்வரும் மாதர்களின் …

மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் Read More

ஒன்றரை வருடத்திற்குப் பிறகு மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது

கொரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020- ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரைவிமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 1½ வருடத்திற்கு பின் தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து 38 பயணிகள்நேற்று மதுரை விமான நிலையம் வந்தனர். மதுரை விமான நிலையத்தில் உள்ள சுகாதார துறைஅதிகாரிகள் மூலம், விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் மதுரையில் இருந்து இலங்கைக்கு 76 பயணிகள் அதே விமானத்தில் புறப்பட்டு கொழும்புசென்றனர். கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விமானத்தில்செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாரத்தில் திங்கட்கிழமை மட்டுமே இந்த விமான சேவை உள்ளது. அதன்படி, இலங்கையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.15 மணிக்கு மதுரைவந்தடையும். மீண்டும் 10.15 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு இலங்கை சென்றடையும் என அதிகாரிகள்தெரிவித்தனர்

ஒன்றரை வருடத்திற்குப் பிறகு மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது Read More

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம்நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம்முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக்காணிக்கை‘ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள்அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்குவந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப்பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும்விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றைவிதி எண் 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில்வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரியநல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) ”ஈ.வெ. இராமசாமி என்கிற நான் திராவிடசமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்றசமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ளசமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்யஎனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும்வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டுதொண்டாற்றி வருகிறேன்” என்றுஅறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் தந்தை பெரியார்அவர்கள்.  (மேசையைத் தட்டும் ஒலி) ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையேஅடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம்தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் மானமும்அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலகஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்தியபோராட்டங்கள் யாராலும் ‘காப்பி‘ அடிக்க முடியாதபோராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும்எழுதத் தயங்கும் எழுத்துக்கள்; அவர் பேசியபேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர்நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்;தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனதுஎதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்தநடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர்நடத்திய மாநாடுகள், அவர் நடத்தியபோராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்தமாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப்பேச வேண்டும். “மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்” – இவைஇரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகியஇரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன.  அந்த இரண்டுக்கும்எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவைஅனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக்கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத்தூண்டினார்.  அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம்சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர்உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம்சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கிஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில்மேன்மையை அடைவதற்கான சமூகநீதிக் கதவைத்திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியாமுழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள்விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்டஅடித்தளமே காரணம். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாதஅவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது.சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரதுசிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்தமாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனதுசிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும்அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.  ‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தைபெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்தகாலம்தான்‘ என்று நம்மையெல்லாம் உருவாக்கியபேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். ”பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்”  என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  (மேசையைத் தட்டும் ஒலி) பேரறிஞர் பெருந்தகையும், தலைவர் கலைஞர் அவர்களும் உருவான குருகுலம்பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப்பயிற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தைஉருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துக்களைத்தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதேகொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை …

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம்நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம்

ஆளும் அரசுகளுக்கெதிராக,   நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்கு குரல்கொடுக்கும் அறப்போர் இயக்கம்,  அண்மையில் மக்களிடம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்துத்தான் காரியம் ஆற்ற வேண்டியுள்ளது என்று 93 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யார் ஆட்சி செய்தாலும் இந்த …

நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம் Read More

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை – கோபாலபுரத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது இல்லத்தில், மொழிப்போர் தியாகியும் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தின் முன்னாள் அவைத்தலைவருமான சிந்தாமணி ஜெயராமனை சந்தித்து அவரது 92-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத் தமது …

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் Read More