கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

கீழடி அருகே கொந்தகையில் ஒரே அகழாய்வு குழியில் இருந்து 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் 2ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடக்கும் நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் …

கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு! Read More

சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடை எதிர்த்து சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதில்லை. ஆராய்ச்சி, முனைவர் …

சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடை எதிர்த்து சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் Read More

போலந்தில் இருந்து வந்த தபால் பார்சலில் உயிருள்ள சிலந்திகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

அரிதான உயிரினங்கள் கடத்தி வரப்படலாம் என்ற தகவல் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில். வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு போலந்தில் இருந்து வந்த பார்சல் ஒன்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அருப்புக்கோட்டையில் வசிக்கும் நபர் ஒருவருக்கு அந்த பார்சல் வந்திருந்தது. வெள்ளி …

போலந்தில் இருந்து வந்த தபால் பார்சலில் உயிருள்ள சிலந்திகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவுக்கு சரத்குமார் கண்டனம்

படைப்பாளிகளின் கற்பனைக்கு அரசாங்கம் தனது அதிகாரத்தால் அணைகட்ட எண்ணுவது மடமை. சமூக மாற்றத்திற்கான விதையை தங்களது படைப்புகளில் வெளிக்கொணரும் கலைஞன் மீது சுய விருப்பு, வெறுப்புகளை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு – 2021 ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மத்திய அரசு தடை …

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவுக்கு சரத்குமார் கண்டனம் Read More

சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம்

சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது . 1924 ஆம் ஆண்டு 29 நாடுகளுடன் இது துவங்கியது. தற்போது 150 நாடுகள் இதில் இணைந்து உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 9,000 பத்திரிகையாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். விளையாட்டு …

சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம் Read More

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார் ஆணையர்

பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் நுழைவு வாயில்களில் ஒன்றான மாதவரம் GNT சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பான மாதவரம் ரவுண்டனா, சென்னையிலுள்ள பல பகுதிகளை இணைக்கும் சாலை சந்திப்பு என்பதால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் இடமாக உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார் ஆணையர் Read More

கொரோனா பெருந்தொற்று பேரிடர்காலத்தில் மகத்தான பணிபுரிந்தமருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்துமற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசுகொரோனா மருத்துவமனையில், சட்டமன்றப்பேரவையில் மாண்புமிகு ஆளுநர்உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு,புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்குபிந்தைய நல்வாழ்வு மையத்தை (Post Covid Care Clinic) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1.7.2021 அன்று திறந்துவைத்தார். இம்மையத்தில் கொரோனாதொற்றுலிருந்து மீண்டவர்களுக்கு இருதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரழிவு, உளவியல் தொடர்பான சிகிச்சைகள்அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கைமருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும்இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில்மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார்கள். இம்மையம், மாநிலங்களவைமுன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இம்மையத்தில், சர்வதேச பயணிகளுக்குபன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படிஆப்பிரிக்க மற்றும்  தென் அமெரிக்கநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல்  இருந்து  மஞ்சள்  காய்ச்சல் தடுப்பூசி மற்றும்போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தென்இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநிலஅரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாகஇந்நிலையம் விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம்மேற்கொள்வோர்க்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர், சென்னை, தமிழ்நாடு டாக்டர்எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில்நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் முதலமைச்சர மு.க. ஸ்டாலின் தலைமையேற்று, அரசுமருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களைமருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ மற்றும்ஊரக நலப் பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம்மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர்(ESI), இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் ஆகியோருக்கும், தனியார் மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறுமருத்துவச் சங்கங்களுக்கும் வழங்கி கௌரவித்தார்.மேலும், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இனமக்களுக்கும், தேயிலை தோட்டங்களில்பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகிததடுப்பூசி போடப்பட்டு, இந்தியாவிலேயே முதல்மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை விளங்கிடசெய்த நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிபாராட்டினார். பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத் துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம்அவர்களிடம் 55,000 Pulse Oxymeter கருவிகளைசுகாதாரத் துறை பணியாளர்களின்பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கி, மாநில தலைநகரம்மற்றும் மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை (War Room) செயல்பாடுகளை விளக்கும் குறும்படதகட்டினையும் வெளியிட்டார்.நிகழ்வின் இறுதியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவர் தினவிழாவில் பேசியதாவது: அனைவருக்கும் அன்பான வணக்கம். இன்று மருத்துவர் தினம். இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நலனுக்கான அரசுமட்டுமல்ல, மருத்துவர்கள் நலனுக்கான அரசாகஉங்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதைஎடுத்துச் சொல்லி, மருத்துவ தின விழாவில் உங்கள்அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புபெற்றதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, உங்களுடைய தியாகத்திற்கும் தொடர்ந்துஆற்றக்கூடிய பணிகளுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. இந்நிகழ்வுகளில், மாண்புமிகு மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம்மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம்கவி, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்திரு.டி.கே. ரங்கராஜன், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நல வாழ்வு குழுமஇயக்குநர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் திரு. சு.கணேஷ், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் முனைவர்ச. நடராஜன், இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவசேவைக் கழக இணை இயக்குநர் திரு. தீபக்ஜேக்கப், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் திரு.டி.என். ஹரிஹரன், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரதிட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, இ.ஆ.ப., திரு.சுகி சிவம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.  

கொரோனா பெருந்தொற்று பேரிடர்காலத்தில் மகத்தான பணிபுரிந்தமருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன்

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து தன்னலமற்ற சேவையாற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள்.  அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன். சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில்தான், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட …

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன் Read More

நீட்’ தேர்வை விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் – கெளதமன்

நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்து, விளிம்பு நிலை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஒன்றிய பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்க, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க ஒன்று திரண்டது போல, ‘நீட்’டை விரட்ட ஒட்டுமொத்த தமிழினமும் கட்டாயம் மீண்டும் …

நீட்’ தேர்வை விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் – கெளதமன் Read More

எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

எம்.கே.டி.’’ என்று அன்போடு அழைக்கப்பட்டதிரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944 ஆம் ஆண்டு வெளியான “ஹரிதாஸ்’’ என்னும் திரைப்படத்தில் …

எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More