தாம்பரம் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் கொண்டு, மொத்த பரப்பளவு 86.74 சதுரகி.மீ. ஆகும். இம்மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் உலக கால்நடை சேவைகள் (WVS) மூலம் கணக்கெடுப்பின் படி 46,286 தெருநாய்கள் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்திய விலங்கு நலவாரியம் (AWBI) (ம) ABC 2023 விதியின் வழிக்காட்டுதலின் படி தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி (ARV) இடப்பட்டு, மீண்டும் அதன்வாழ்விடத்திலேயே விடப்பட வேண்டும். தாம்பரம் மாநகராட்சியில் மூன்று கருத்தடை மையம் 2023 ல் இருந்து இயங்கி வருகிறது. மேலும் 3 மையத்தில் செய்த அறுவை சிகிச்சைகளின் விவரம் பின்வருமாறு.
|
வ,எண் |
மையத்தின் பெயர் |
2023 |
2024 |
2025 |
2026 |
மொத்தம் |
|
1 |
பாரதிபுரம் |
1409 |
2493 |
2817 |
2267 |
8986 |
|
2 |
குண்டுமேடு |
169 |
35 |
1182 |
1995 |
3381 |
|
3 |
அனகாப்புத்தூர் |
204 |
29 |
1405 |
1229 |
2867 |
|
மொத்தம் |
1782 |
2557 |
5404 |
5491 |
15234 |
சகவாழ்வு தாம்பரம் என்ற திட்டத்தின் கீழ் 06.08.2025 முதல் 24.10.2025 வரை மொத்தம் 50 நாட்களில் தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் உள்ள தெருநாய்கள் மற்றும்வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி 36745 நாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதுமற்றும் 2026 ஆம் ஆண்டு 08.08.2026 அன்று தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும்உள்ள தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி 12.09.2026 வரை 41485 நாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

