பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன்

பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட 123 பயனாளிகளுக்கு 1,03,72,240/- (ஒரு கோடி மூன்று லட்சத்து எழுப்பதிரெண்ட்டாயிரத்துஇருநூற்று நாற்பது)  ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் வழங்கினார்.. பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, வீட்டு மனை பட்டா வழங்கும் விழா பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில்  நடந்தது 123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்,வருவாய் ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.