இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், வா;த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் சார் ஆட்சியா; அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், முழு …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம் Read More

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொவிட்-19 தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கொவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து …

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Read More

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சம் மோசடி பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை ஆணையர் பாராட்டினார்

​​சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர்கிரைம்குற்றப்பிரிவில் அளிக்கப்படும் புகாரின் மீது உடனேவிசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் பெறப்படும்பணபரிவர்த்தனை ஏமாற்றம் அடைந்த புகார்களில்உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம், சிட்கோ நகர், 18வது தெருவில் வசித்து வரும் அன்பரசு, வ/62, த/பெ.பிச்சையப்பன் என்பவர் ONGC நிறுவனத்தில் வேலைசெய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 25.05.2021 அன்று மதியம் சுமார் 03.30 மணியளவில் அன்பரசுவின்செல்போனுக்கு Pan Card Update செய்ய வேண்டும் என்றுவங்கியில் இருந்து அனுப்புவது போல குறுஞ்செய்திவந்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது செல்போன்எண்ணில் அழைத்து பேசிய நபர் தான் SBI வங்கியின்துணை மேலாளர் பேசுவதாகவும் தங்களின் Pan Card Update செய்ய வேண்டும் என்றும் அதற்காக தங்களின்செல்போன் எண்ணிற்கு வந்துள்ள குறுஞ்செய்திஅனுப்பியுள்ளதாகவும், தற்போது அனுப்பிய OTPஎண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். இதனைஉண்மையென நம்பிய அன்பரசு OTP எண்ணைஅனுப்பிய சில நிமிடங்களில் அன்பரசுவின் வங்கிகணக்கிலிருந்து சிறிது சிறிதாக என ரூ.53,25,000/- பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, அன்பரசு 26.05.2021 அன்று V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டபுகாரை அண்ணாநகர் காவல் மாவட்ட துணைஆணையர் திரு.G.ஜவஹர், இ.கா.ப., அவர்கள்கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சைபர்குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்து உடனே, அண்ணாநகர்காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன்(கா.46781) மற்றும் ராம்சங்கர் (கா.46193 ) ஆகியோர்துரிதமாக செயல்பட்டு அன்பரசுவின் பாரத ஸ்டேட் வங்கிநிர்வாகத்தில் விசாரணை செய்தபோது, எதிரிகள்அன்பரசுவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.25,000/- ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் மற்றொரு வங்கிகணக்கிற்கு மாற்றியுள்ளதும், ரூ.53,00,000/- அவரதுவங்கி கணக்கில் Fixed Deposit ஆக பண பரிவர்த்தனைசெய்து பின்னர் OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சத்தைஅபகரிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. உடனே சைபர்குழுவினர் பரிந்துரையின்பேரில் வங்கி நிர்வாகம்அன்பரசுவின் Net banking அக்கவுண்டை நீக்கம் செய்து,பணபரிவர்த்தனை மூலம் மாற்றம் செய்யப்பட இருந்தரூ.53 லட்சத்தை திரும்ப அவரது சேமிப்பு வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்டது. மேலும், ஆன்லைன்பரிவர்த்தனையில் மோசடியான பணம் ரூ.25,000/- பணத்தையும் மீட்டு தருவதாக வங்கி நிர்வாகம்உறுதியளித்தது. வங்கி அதிகாரி போல செல்போனில் பேசி, ஆன்லைன் மூலம் இழந்த தனது பணத்தை பெற்று தந்தஅண்ணாநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவிஆய்வாளர் ராஜாசிங் மற்றும் காவல் குழுவினருக்குநெகிழ்ந்து நன்றி கூறினார். அன்பரசு பாராட்டினார். மேலும், மேற்படி சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இழந்தபணத்தை மீள பெற்றுத் தந்த அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன் (கா.46781) மற்றும்ராம்சங்கர் (கா.46193) ஆகியோரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேற்று (27.5.2021) நேரில் அழைத்துப் பாராட்டிவெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சம் மோசடி பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை ஆணையர் பாராட்டினார் Read More

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார்

​​சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்குகாரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வோர் மீதுபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும்காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வாகனத் தணிக்கைமற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களைநேரடியாக சந்தித்து வருவதால், காவல்துறையினர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சதிஷ்பாபு, வ/49, (த.கா.17752) என்பவருக்கு கடந்த 14.5.2021ம் தேதிகொரோனா தொற்று ஏற்பட்டு, கிண்டி Kings மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை, சென்னைபெருநர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.கே.சௌந்தரராஜன்அவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விவரம் அறிந்துகாவல் ஆணையாளர் அவர்களிடம் தெரிவித்ததன் பேரில், மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடுஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  மேற்படி தலைமைக்காவலர் திரு.சதீஷ்பாபுவின்குடும்பத்தினர் வசித்து வரும் கீழ்ப்பாக்கம், லூத்தரல் கார்டன்காவலர் குடியிருப்பிற்கு இன்று (28.05.2021) காலை 11.30 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேரில் சென்றுசதீஷ்பாபுவின் குடும்பத்தினர்களை சந்தித்து,  அவசரசிகிச்சை பிரிவில் இருந்து வரும் சதீஷ்பாபுவிற்கு தேவையானஅனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் சென்னை பெருநகர ஆயுதப்படை துணைஆணையர் திரு.கே.சௌந்தரராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார் Read More

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் …

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை Read More

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

நடுவணரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொரோனா தொற்று பரவியது. முதல் அலை ஊரடங்கில் தமிழகத்தின் பாதி தொழில்கள் காணாமல் போயின. மீதி …

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா

இந்தியாவில் கொரோனாவில் இருந்து  2,59,459 குணமடைந்துள்ளனர். 2,48,93,410 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளனர். 90.34% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தந்துள்ளது. கடந்த 44 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 …

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா Read More

ஓமம் தண்ணீர் குடிப்பதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது

ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் உள்ளன, இது இருமல், சளி, காது அல்லது வாய் தொற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சரியான மருந்தாக அமைகிறது. நம்முடைய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமல்லாமல் மருத்துவ நன்மைகளையும் தருகின்றன. …

ஓமம் தண்ணீர் குடிப்பதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது Read More

சென்னையில் பாலியல்  குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றுமொரு பள்ளி

சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவ்வகுப்பின் மாணவிகள் கொடுத்த புகாரைத் …

சென்னையில் பாலியல்  குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றுமொரு பள்ளி Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு  30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்ட நிலையில் விடுவிப்பில் வந்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு Read More